மக்கள் செல்வனுடன் இணையும் வைகைப் புயல்… அடடே கூட்டணி கொஞ்சம் பலமா இருக்குதே!

சென்னை: விஜய் சேதுபதி தற்போது விடுதலை, ஜவான், காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

வைகைப்புயல் வடிவேலு மாமன்னன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி, வடிவேலு இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஸியான விஜய் சேதுபதி

பிஸியான விஜய் சேதுபதி

காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், விக்ரம் படங்களில் வெரைட்டியான நடிப்பால் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார் விஜய் சேதுபதி. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் ரொமாண்டிக் ஹீரோவாக கலக்கினார். அப்படியே மாமனிதன் படத்தில் தோல்வியால் துவண்டு ஊரை விட்டு ஓடிய குடும்பஸ்தனாக நடிப்பில் பிரமிக்க வைத்தார். விக்ரம் படத்தில் இன்னும் ஒருபடி மேல சென்று மிரட்டலான வில்லனாக கெத்து காட்டினார். இதனைத் தொடர்ந்து தற்போது சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

விரைவில் புதிய படம் அப்டேட்

விரைவில் புதிய படம் அப்டேட்

தமிழில் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, 'காந்தி டாக்ஸ்' என்ற மெளனப் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். அதேபோல், இந்தியில் ஷாருக்கானுடன் 'ஜவான்'', கத்ரினா கைஃப் உடன் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' இயக்குநர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஆறுமுக குமாரே இயக்கி அவரே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடிவேலுவுடன் கூட்டணி

வடிவேலுவுடன் கூட்டணி

இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக விஜய் சேதுபதியுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு நிகரான ஒரு பாத்திரத்தில் வடிவேலு நடிக்க உள்ளாராம். பல வருட இடைவேளைக்குப் பிறகு ஏற்கனவே கமிட் ஆகியிருந்ஹ 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு. மேலும், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களிலும் வடிவேலு முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் வடிவேலு நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதிக்கு காமெடி கேரக்டர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அதேபோல், வடிவேலுவும் சிங்கிளாகவே தெறிக்க விடுவார். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்தால் ரசிகர்களின் நிலை அவ்வளவு தான். விஜய் சேதுபதி, வடிவேலு இணைந்து நடிக்கவுள்ள படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X