Don't Miss!
- News
உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்குறாங்களே... வடிவேலுவுக்கு வந்த சோதனையா இது?: அட பாவமே
சென்னை: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் கம்பேக் கொடுத்துள்ள வடிவேலு, அடுத்தடுத்து படங்களில் நடிக்க தனது கால்ஷீட்டை தயாராக வைத்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் வடிவேலு.
அதேபோல், ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் காமெடி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருந்தார் வடிவேலு.
தடைகள் கடந்த வெற்றி... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தயாரிப்பாளர் ஹேப்பி: வடிவேலு சொன்ன மாமன்னன் சீக்ரெட்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
ரெட் கார்டு பிரச்சினையால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் திரும்பி வந்தார். லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கிய இந்தப் படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதனால் இனிமேல் ஹீரோவாக நடிக்காமல், வழக்கம் போல காமெடி ரூட்டுக்கு திரும்பிவிடலாம் என்ற முடிவில் உள்ளாராம் வடிவேலு. அதேநேரம் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துவிட்ட வடிவேலு, அடுத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் காமெடி அதகளம் செய்து வருகிறார். மாமன்னன், சந்திரமுகி 2 இந்த இரண்டு படங்களும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

புதிய கூட்டணிக்கு ரெடி
தொடர்ச்சியாக காமெடி கேரக்டரில் நடிக்க பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் வடிவேலு. அதேபோல் புதிய கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை, பழைய கூட்டணி என்றாலும் ஓக்கே தான் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வடிவேலும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. வெற்றிமாறன் இயக்கும் விடுதலை, மெளனப் படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான்', கத்ரினா கைஃப் உடன் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

படம் தொடங்குவதில் சிக்கல்
இதனைத் தொடர்ந்து, 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' இயக்குநர் ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைவதாக சொல்லப்பட்டது. இந்தப் படத்தை ஆறுமுக குமாரே இயக்கி அவரே தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதால் விஜய் சேதுபதியுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது.

அப்செட்டான வடிவேலு
விஜய் சேதுபதியுடன் வடிவேலு நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விஜய் சேதுபதிக்கு காமெடி கேரக்டர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அதேபோல், வடிவேலுவும் சிங்கிளாகவே தெறிக்க விடுவார். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்தால் ரசிகர்களின் நிலை அவ்வளவு தான் என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், பைனான்ஸ் பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதி - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படம் உறுதியாக தொடங்குமா என்றும் இதுவரை எதுவும் தெரியவில்லையாம். இதனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரும்பவும் நடிப்பில் பிஸியாகலாம் என நினைத்திருந்த வடிவேலு, கடும் அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கனவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால், வடிவேலுவின் மார்க்கெட் முடிந்துவிட்டது என விமர்சகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.