»   »  ரூட்டை மாற்றும் விஜய் சேதுபதி - ரசிகர்களைக் கவர புது பிளான்!

ரூட்டை மாற்றும் விஜய் சேதுபதி - ரசிகர்களைக் கவர புது பிளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்கள். அதனால் அவர்களது ரசிகர்கள் அந்தப் படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், தற்போது முன்னணி நடிகராகிவிட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்துவிடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில படங்களும் இவரது படங்களூடே வெளியாகின்றன.

Vijay sethupathi change his route to attract fans

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், எனக்கும் என் படம் எப்போது வரும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால், நண்பர்களாக இருக்கும் இயக்குநர்களின் அன்புக்கிணங்க பல படங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது.

என்றாலும், இந்த நிலையை இனிமேல் தொடர விடமாட்டேன். என் முகத்தை அடிக்கடி பார்த்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். ஏனென்றால் நான் சுமார் மூஞ்சி குமாரு என்பது எனக்குத் தெரியும்.

Vijay sethupathi change his route to attract fans

அதனால் இனிமேல் நானும் பட எண்ணிக்கையைக் குறைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கப்போகிறேன் எனக் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் தற்போது 'சூப்பர் டீலக்ஸ்', '96', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'சீதக்காதி', 'ஜுங்கா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Many of the leading actors are acting only in one film per year. Vijay Sethupathi, who is now leading actor, has acted in four or five films for a year. He has decided to follow new way to attract fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil