»   »  ராமன்.. ராவணன்னு சொன்னாதானே தகராறு... இப்ப பாரு..! - மாத்தி பேசிய விஜய் சேதுபதி

ராமன்.. ராவணன்னு சொன்னாதானே தகராறு... இப்ப பாரு..! - மாத்தி பேசிய விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மக்களின் கருத்து

சென்னை : விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கும் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

ஆறுமுக குமார் இயக்கிய இந்தப் படத்தின் டீசரில், ராமாயணத்தில் வரும் ராமன் மற்றும் ராவணனைப் பற்றிய வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த டீசரில் இடம்பெற்ற ராமன் குறித்த வசனங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது படத்தில் அந்த வசனங்களை மாற்றிப் பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கௌதம் கார்த்திக், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகை நிஹாரிகாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பல கெட்டப்புகளில் வருகிறார்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீசர்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் டீசர்

முன்பு வெளியான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசரில் "ராமன் கெட்டவனா... ராவணன் கெட்டவனா..." என விஜய் சேதுபதி வசனம் பேசுவது இடம்பெற்றிருந்தது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமன் கடவுளா

ராமன் கடவுளா

"ராவணன் சீதையைத் தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வெச்சுருந்தானா.. அவனை நாம அரக்கன்னு சொல்றோமா... ராமன் சீதையைக் காப்பாத்தி கொண்டுபோய் அவளைச் சந்தேகத் தீயில போட்டு எரிச்சானா... அவன நாம கடவுள்னு சொல்றோமா..." என வசனம் பேசியிருந்தார் விஜய் சேதுபதி.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

"ராமனும் நான் தான் ராவணனும் நான் தான்" என மிரட்டலாகச் சொன்னார் விஜய் சேதுபதி. ராமனை தவறாகச் சித்தரிப்பது போல இந்த வசனம் இருப்பதாக டீசர் வெளிவந்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது ராம பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

வசனத்தை மாற்றிப் பேசிய விஜய் சேதுபதி

வசனத்தை மாற்றிப் பேசிய விஜய் சேதுபதி

இந்த சர்ச்சையை விஜய் சேதுபதி கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து அவரது அட்வைஸ் படி படத்தில் 'ராமன்... ராவணன்' என வரும் இடங்களில் 'குப்பன்... சுப்பன்' என மாற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்தக் காட்சியில் லிப் சிங்க் ஆகாததால் ரசிகர்கள் புரிந்துகொண்டு கூச்சலிட்டனர்.

செம வசூல் போச்சே

செம வசூல் போச்சே

விஜய் சேதுபதி அறிவுரையின் பேரில் இப்படி 'குப்பன், சுப்பன்' என மாற்றி படத்தின் மீதான சர்ச்சையிலிருந்தும் தப்பித்தாகிவிட்டது. வசனத்தை சொன்னமாதிரியும் ஆகிவிட்டது. ஆனால், இந்த வசனம் அப்படியே இடம்பெற்று ஒருவேளை சென்சாரிலும் தப்பித்திருந்தால் சில கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நல்ல வசூலை அள்ளியிருக்கலாம். பாவம்!

English summary
Vijay Sethupathi and Gautham Karthik starring 'Oru nalla naal paathu solren' movie released in theaters today. This film's teaser contains controversial dialogue about Raman and Ravanan. This dialogue has been transformed into 'kuppan and Suppan' in places where 'Raman and Ravanan'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil