வாத்தி கம்மிங்...டான்ஸில் பட்டையை கிளப்பிய விஜய் சேதுபதி

சென்னை : இந்திய அளவில் பல மொழி சினிமாக்களில் பிஸியான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் விஜய் நடித்த மாஸ்டர் படம், ரஜினி நடித்த பேட்ட ஆகிய படங்களில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பல படங்களிலும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து இயக்கி வரும் விக்ரம் படத்தில் மெயின் வில்லன் ரோலில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதைத் தொடர்ந்து பல படங்களிலும் வில்லன் ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறது.

நடனமாடிய விஜய் சேதுபதி

நடனமாடிய விஜய் சேதுபதி

இந்நிலையில் லேட்டஸ்டாக மாஸ்டர் படத்தில் உலக அளவில் செம வைரலான பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் சேதுபதியும் நடனமாடி உள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அனைவரையும் கவர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்து விட்டு பலரும், அட...விஜய் சேதுபதிக்கு இப்படி எல்லாம் கூட ஆட தெரியுமா என ஆச்சரியத்தில் பலர் வாயடைத்து போய் உள்ளனர்.

பிரபலமாக்கிய பிரபலங்கள்

பிரபலமாக்கிய பிரபலங்கள்

ஏற்கனவே பல மாதங்களாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு துறையினர் என பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர். ரவிச்சந்திர அஸ்வின், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், நடிகைகள் நஸ்ரியா, மாதுரி தீட்சித், ஜெனிலியா ஆகியோரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வைரலாக்கினர்.

வைரலான வீடியோக்கள்

வைரலான வீடியோக்கள்

இந்திய பிரபலங்கள் மட்டுமல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், புத்த பிட்சுக்கள் என பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அதை வைரலாக்கி உள்ளனர். வட சென்னை கானா மற்றும் தாரை தப்பட்டை இசையுடன் கலந்து இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார் அனிருத் ரவிச்சந்திரன். இந்த பாடலை அனிருத்தும், கானா பாலச்சந்தரும் இணைந்து பாடி இருந்தனர்.

 யூட்யூப்பில் சாதனை

யூட்யூப்பில் சாதனை

வாத்தி கம்மிங் பாடல் யூட்யூப்பில் இதுவரை 290 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 2.9 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் சேதுபதி நடனமாடி உள்ள வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X