twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “நான் பேசல என்னோட அட்மின் பேசினாருனு சொல்றதுதான் இப்ப டிரெண்ட்”.. ஐடி ரெய்டு பற்றி விஜய்சேதுபதி

    96 பட செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

    |

    Recommended Video

    ஐடி ரெய்டு பற்றி விஜய்சேதுபதி-வீடியோ

    சென்னை: கண்டதை பேசிவிட்டு பிறகு அதை நான் பேசவில்லை என்று சொல்வது, தமிழ்நாட்டில் சமீபத்திய டிரெண்டாகி இருக்கிறது என நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம் '96'. அடுத்த வாரம் இப்படம் திரைக்கு வருகிறது.

    இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி தனது வீட்டில் நடந்தது வருமான வரித்துறை சோதனை அல்ல என விளக்கமளித்துள்ளார்.

    நிம்மதியான வேலை:

    நிம்மதியான வேலை:

    இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், "96 படம் தொடங்க காரணம் பிரேம் தான். இந்த படம் நிச்சயம் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தும். இந்த படத்தில் வேலை பார்த்த போது அனைவருமே நிம்மதியாக வேலை பார்த்தோம். யாருக்கும் யார் மீதும் சந்தேகம் இல்லை. ஒரு நாள் இரவில் நடப்பது தான் கதை.

    விளக்கம்:

    விளக்கம்:

    எனது வீட்டில் நடந்தது வருவான வரித்துறை சோதனை இல்லை. அது சர்வே என அதிகாரிகள் கூறினர். வருமான வரித்துறையில் சர்வே என ஒன்றிருப்பது குறித்து எனக்கே இப்போது தான் தெரியும்.

    ஆடிட்டர்:

    ஆடிட்டர்:

    நான் கடந்த மூன்று வருடங்களாக முன்பணமாக வரி கட்டி வருகிறேன். ஆனால் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை. எனது ஆடிட்டர் திடீரென போய் ரிட்டன் தாக்கல் செய்ததால், வருமான வரித்துறையினர் வந்து சர்வே செய்தனர்.

    பப்ளிசிட்டி தான்:

    பப்ளிசிட்டி தான்:

    இது தான் நடந்தது. அதற்குள் ஐடி ரெய்டு என தகவல் பரவிவிட்டது. அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான். பொதுவாக தவறான செய்திகள் தான் வேகமாக பரவும். நாம் காசு கொடுத்தால்கூட அது கிடைக்காது.

    இது தான் டிரெண்ட்:

    இது தான் டிரெண்ட்:

    பிறகு நம் ஊரில் சமீபகாலமாக கண்டதை பேசினால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று சமீபகாலமாக ஒரு டிரெண்ட் இருக்கு. பப்ளிக்கா கத்திப் பேசிட்டு, அப்புறம் நான் பேசல என்னோட அட்மின் பேசினாரு என்று சொல்லலாம். இல்ல மிமிக்கிரி பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம்.

    பயந்த சுபாவம்:

    பயந்த சுபாவம்:

    அது மாதிரி என் வீடு போல் செட் போட்டு செக் பண்ணிருக்காங்க. அது என் வீடே இல்ல. என் வீடு போன்ற செட். நான் வெளிப்படையா பேசமாட்டேன். ஏனென்றால் நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன்.

    திரிஷா மீது பயம்:

    திரிஷா மீது பயம்:

    திரிஷாவை பார்த்தால் சின்ன வயசில் இருந்து எனக்கு பயம். நான் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் என் அம்மா திரிஷாவை காட்டிதான் பயமுறுத்துவார்கள்.

    இளையவர்:

    இளையவர்:

    திரிஷாவை எல்லோரும் சீனியர் என்கிறார்கள். பொதுவாக ஹீரோயின்கள் சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்துவிடுவார்கள். அதுபோல் தான் திரிஷாவும். என்னைவிட திரிஷா ஏழு வருடங்களாகவது இளையவராக இருப்பார்" இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    While speaking in the press meet of 96 movie, action Vijay Sethupathi explained about the news on IT raid at his home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X