twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதி பற்றி தரம் தாழ்ந்து பதிவிடுகிறார்கள்.. ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைமில் புகார்

    By
    |

    சென்னை: விஜய் சேதுபதி பற்றிய தரக்குறைவான பதிவுகளை நீக்க வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றம் சார்பில் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Recommended Video

    Vijay Sethupathi Controversial speech : இந்து கடவுளை பற்றி விஜய்சேதுபதி என்ன பேசினார்?

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இப்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    தமிழ் தவிர, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்தில் ஆமிர்கானுடன் நடிக்கிறார்.

    பண்டரி பாய் முதல் வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் வரை சினிமாவில் கலக்கிய அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல்!பண்டரி பாய் முதல் வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் வரை சினிமாவில் கலக்கிய அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல்!

    நம்ம ஊரு ஹீரோ

    நம்ம ஊரு ஹீரோ

    இந்நிலையில் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சன் டிவியின் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது கோவில்களில் அபிஷேகம் நடத்துவதை பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் இப்போது சிலர் பரப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்து மக்கள் முன்னணி

    இந்து மக்கள் முன்னணி

    இந்துக்களுக்கு எதிராகவும் சாமிகளுக்கு எதிராகவும் அவர் பேசியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி மீது ஆன்லைன் மூலமாக இந்து மக்கள் முன்னணி அமைப்பாளர் நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    சைபர் கிரைம்

    சைபர் கிரைம்

    பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பேசி இருப்பதாகவும், அவர் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். இது பரபரப்பானது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றத்தினர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

    கிரேசி மோகன்

    கிரேசி மோகன்

    விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் ஜே.குமரேசன் என்பவர் இதுபற்றி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன் 17.03.2019 அன்று சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவைத் துணுக்கை அதில் மறுபதிவு செய்தார்.

    பெரும் சர்ச்சை

    பெரும் சர்ச்சை

    அப்படி எதார்த்தமாக சொன்னதை அந்த தன்மையில் இருந்து , இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்னதாக மாற்றி அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து விஜய்சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை நிகழ்கிறது.

    தரம் தாழ்ந்து

    தரம் தாழ்ந்து

    இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள். விஜய் சேதுபதியின் பெயரை குலைப்பதோடு தேவையில்லாத வாக்குவாதங்கள், நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் தூண்டுகோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    காழ்ப்புணர்ச்சி

    காழ்ப்புணர்ச்சி

    அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம் தனிமனித கருத்துகள் வேறுபட்டிருந்தாலும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் தனிமனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது.

    பதிவுகளை அகற்ற

    பதிவுகளை அகற்ற

    அதனால் உடனடியாக விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றிய தரக்குறைவான அருவெறுக்கத்தக்க வகையில் உள்ள பதிவுகளை அகற்றவும் இத்தகையை பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிபட்ட அவதூறுகளுக்கு காரணமாக அமைந்த அந்த சர்ச்சைக்குரிய காணொலியையும் நீக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Actor Vijay Sethupathi fans association has filed a complaint on cyber crime police
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X