ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா? இல்லையா?...அவரே சொன்ன செம தகவல்
மும்பை : தமிழில் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த டைரக்டர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஷாருக்கானை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஜவான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான், நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.
மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிப்பதாகவும், ஜவான் படத்தில் நடிப்பதற்காக புஷ்பா 2 படத்தில் வில்லன் ரோலில் நடிக்க விஜய்சேதுபதி நோ சொல்லி விட்டதாகவும் சொல்லப்பட்டது.

புஷ்பா 2 க்கு நோ சொல்ல இதுதான் காரணமா
புஷ்பா 2 படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்பட்ட காட்சிகளின் ஷுட்டிங் மற்றும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளின் ஷுட்டிங் ஆகியன ஒரே நாளில் நடத்த முடிவு செய்யப்பட்டதால், கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே புஷ்பா 2 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக சொல்லப்பட்டது.

ஜவானில் விஜய் சேதுபதி இருக்காரா?
இந்த சமயத்தில், ஜவான் படத்தில் தான் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக விஜய் சேதுபதியே கன்ஃபார்ம் செய்து விட்டார். ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா, இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது அது உண்மை தான் என அவரே கன்ஃபார்ம் செய்துள்ளார்.

விஜய் சேதுபதியிடம் ரசிகர் கேட்ட கேள்வி
அதோடு சமீபத்தில் அனிருத், விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரசிகர்களுடன் கலந்துரையாடிய விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் ஜவான் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, கண்டிப்பாக என ஒரே வார்த்தையில் பதிலளித்தார். இந்த படம் 2023 ம் ஆண்டு ஜுன் 2 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் வில்லன் கிடையாதா?
ஜவான் படத்தில் விஜய் சேதுபதி தான் வில்லன் என தகவல் பரவி வருகிறது. ஆனால் கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்பதால், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதாவது ரோலில் வந்து போகிறாரா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். இதனால் விஜய் சேதுபதியின் ரோல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இறங்கி விட்டனர்.

நயன்தாராவின் பாலிவுட் என்ட்ரி
நயன்தாராவின் முதல் பாலிவுட் படமான ஜவான் படத்தில் அவர் இன்வெஸ்டிகேடிவ் அதிகாரியாக நடிக்கிறார். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. பிரியாமணி முக்கிய ரோலில் நடிப்பதாக சொல்லப்படுவதால் இரண்டு ஷாருக்கான்களில் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.
Recommended Video

ஷாருக்குடன் 2வது படம்
யோகிபாபு, சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கிறார். சன்யா மல்கோத்ரா, சுனில் க்ரோவர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications