»   »  ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஹன்சிகா?

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ஹன்சிகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி - தனுஷ் இணையும் அடுத்த படத்தை தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவிருக்கிறார்.

தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பாக தயாரித்த நானும் ரவுடிதான் படம் வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

Vijay Sethupathi and Hansika for Aishwarya Dhanush?

இதனால் மகிழ்ந்து போன தனுஷ் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கவிருக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் இப்படத்தின் கதையானது, நிவின் பாலியின் நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் கதையாகும்.

இதில் 3 நாயகிகளில் ஒருவராக ஹன்சிகா நடிக்கிறார் மற்ற 2 ஹீரோயின்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரேமம் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதிலும் எதிர்மறையான விமர்சனங்களையும் பெறத் தவறவில்லை.

நானும் ரவுடிதான் படத்திற்குப் பின்னர் விஜய் - சேதுபதி தனுஷ் இருவரும் 2 வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே கோலிவுட்டில் ஏகத்திற்கும் எகிறிக் கிடக்கிறது.

English summary
After Naanum Rowdy Thaan Vijay Sethupathi Again Team Up with Dhanush. Sources Said This Film the Remake of Malayalam Blockbuster Premam, will be Directed by Aishwarya Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil