முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - சந்தானம் காம்போ... முக்கியமான கூட்டணியில் பிளவு?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது.
ஜவான் உட்பட மேலும் பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, தற்போது வெப் சீரிஸ்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சுந்தர் சி உடன் அரண்மனை 4 படத்தில் இணைந்துள்ள விஜய் சேதுபதி, அதற்காக முக்கியமான கூட்டணியில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

பிஸி ஷெட்யூலில் விஜய் சேதுபதி
கோலிவுட்டில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் பிஸியான ஷெட்யூலோடு பரபரப்பாக இருப்பது விஜய் சேதுபதி தான். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில், ஹீரோ, வில்லன் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல் மேலும் பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இதனிடையே விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள ஃபார்ஸி வெப் சீரிஸ் அடுத்த மாதம் வெளியாகிறது.

சுந்தர் சி உடன் கூட்டணி
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் கதைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் காட்டி வருகிறார். இந்நிலையில், சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் 4ம் பாகத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் அரண்மனை படத்தின் 3 பாகங்களை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இதில் மூன்றாம் பாகம் மட்டும் ரசிகர்களிடம் சுத்தமாக எடுபடவில்லை. அடுத்து இயக்கிய காஃபி வித் காதல் படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. இதனால் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் சுந்தர் சி.

முதன்முறையாக கலக்கல் காம்போ
முக்கியமாக அரண்மனை 4ல் சந்தானமும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வந்தார் சந்தானம். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் ஒர்க்அவுட் ஆகாததால் திரும்பவும் காமெடிக்கு திரும்பியுள்ளார். விஜய் சேதுபதி, சந்தானம், சுந்தர் சி இவர்கள் மூவருமே ஹிட் கொடுக்க காத்திருப்பதால், அரண்மனை 4 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முக்கியமான கூட்டணியில் இருந்து விலகல்
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடித்திருந்த 'கடைசி விவசாயி' விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை விஜய் சேதுபதி தயாரித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி ஒரு வெப் சீரிஸில் இணையவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அரண்மனை 4 படத்திற்காக விஜய் சேதுபதி மொத்தமாக தனது கால்ஷீட்டை கொடுத்துள்ளதால், வெப் சீரிஸ் உருவாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அரண்மனை 4 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சந்தானம், சுந்தர் சி இந்த மூவர் கூட்டணி முதன்முறையாக இணையும் அரண்மனை 4 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











