Don't Miss!
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- News
"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வில்லனா நடித்தே 100 கோடி வாங்கிடுவாரு போல விஜய்சேதுபதி.. அடுத்த 3 படத்தில் அவருடைய சம்பளம் இவ்வளவா?
சென்னை: இந்தியாவிலேயே விஜய்சேதுபதி போல ஒரு பவர்ஃபுல் வில்லன் இல்லை என அத்தனை ஸ்டேட்டும் அவரையே வெத்தலை பாக்கு வைத்து அழைத்து வருகிறது.
கடைசி விவசாயி, மனிதன் போன்ற நல்ல படங்களில் நாயகனாக நடித்தாலும் கிடைக்காத வரவேற்பும் சம்பளமும் மாஸ்டர், விக்ரம் படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் விஜய்சேதுபதிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து 3 படங்களில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதிக்கு பெரும் தொகை பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்ரம்
படத்திற்கு
முன்பே
விஜய்
படத்தில்
பயன்படுத்தப்பட்ட
தொழில்நுட்பம்..
சிறப்பான
வீடியோ
வெளியீடு!

வில்லன் விஜய்சேதுபதி
விக்ரம் வேதா படத்தில் புஷ்கர் - காயத்ரி விஜய்சேதுபதியின் ஒட்டுமொத்த ராட்சசனையும் தட்டி எழுப்பி ரசிகர்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய நிலையில், தன்னிடம் இன்னும் சரக்கு அதிகமாவே இருக்கு என படத்துக்கு படம் வெயிட்டு காட்டி வருகிறார் விஜய்சேதுபதி. ரஜினிகாந்தின் பேட்ட, விஜய் உடன் மாஸ்டர், கமலின் விக்ரம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

ஷாருக்கான் படத்தில்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோயின் நயன்தாராவுக்கே 10 கோடி ரூபாய் தான் சம்பளம் என்கிற நிலையில், விஜய்சேதுபதிக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா 2வில் சம்பளம்
அல்லு அர்ஜுனின் புஷ்பா முதல் பாகத்துக்கே விஜய்சேதுபதி தான் வேண்டும் என அடம்பிடித்த நிலையில், நான் ரொம்ப பிசி என மறுத்து விட்டார் மக்கள் செல்வன். ஆனால், புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு, 2ம் பாகத்திலாவது நடிக்க வாங்க சேது என அன்போடு அல்லு அர்ஜுன் அழைக்க 25 கோடிரூபாய் பில் போட்டு இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

பால கிருஷ்ணாவுக்கும் வில்லன்
அகண்டா படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், ஒரு வெப்சீரிஸுக்கு விஜய்சேதுபதி 35 கோடி வாங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

தனுஷ், சிவகார்த்திகேயனை முந்தி
தனுஷ், சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனுக்கு எல்லாம் சம்பளத்தில் பின் தங்கி இருந்த விஜய்சேதுபதி வில்லனாக விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஹீரோக்களாக இவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக விஜய்சேதுபதி வாங்கி வருகிறார் என்றும், 3 படத்திலேயே 80 கோடி சம்பளம் வருதே, சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தையும் சேர்த்தால், வில்லனாகவே 100 கோடி ரூபாய் சம்பாதித்து விடுவார் போல என ரசிகர்கள் விஜய்சேதுபதியின் பக்கா மாஸை பாராட்டி வருகின்றனர்.