»   »  கார்த்திக் சுப்பாராஜின் இறைவியில் நடிக்கும் விஜய் சேதுபதி

கார்த்திக் சுப்பாராஜின் இறைவியில் நடிக்கும் விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இறைவி படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் மூன்றாவது படம் இறைவி. இந்தப் படத்தை அவரது முதல் படமான பீட்சாவை தயாரித்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரே தயாரிக்கிறார்.

நான்கு நபர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து இந்தப் படம் தயாராகிறது என கூறப்படுகிறது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு நடிகர் இவர்களுடன் இணைந்துகொள்ளவிருக்கிறார். அவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

நானும் ரவுடிதானில் பிஸி

நானும் ரவுடிதானில் பிஸி

2014-ம் ஆண்டு எனக்கு நிறைய அனுபவங் களைக் கொடுத்தது. 2015 எப்படியிருக்கும் என்ற ஜோதிடமெல்லாம் எனக்கு தெரியாது. எப்படி இருந்தாலும் எனக்கு சம்மதம்தான் என்று கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இப்போது நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா உடன் பிஸியாக நடித்து வருகிறார்.

விரக்கி விஜய் சேதுபதி

விரக்கி விஜய் சேதுபதி

கடந்த ஆண்டு சில கதைகளை நம்பி நடித்து, அந்த படங்கள் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்தார் விஜய் சேதுபதி

டெமோ படம்

டெமோ படம்

"புது இயக்குநர்கள் கதை சொல்லும்போது நன்றாக சொல்கிறார்கள். ஆனால், படம் எடுக்கும்போது வேறு மாதிரி எடுத்து விடுகிறார்கள். இனிமேல், என்னை வைத்து முதலில் ஒரு 'டெமோ' படம் எடுக்க சொல்லப் போகிறேன். அந்த படம் நன்றாக இருந்தால்தான் 'கால்ஷீட்' கொடுப்பேன்" என்றும் கூறிவந்தார் விஜய் சேதுபதி.

இறைவி

இறைவி

இந்த நிலையில் தனக்கு பிரேக் கொடுத்த பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இறைவி படத்தில் இணைகிறார். விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் தொடர் தோல்வியைத் தழுவின எனவே இனி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் விஜய்சேதுபதி.

English summary
Vijay Sethupathi is currently busy with the shooting of ‘Naanum Rowdy Thaan’ directed by c. The movie is expected to be a Mass Masala Entertainer, and it has Nayan Thara in the role of lady lead. Karthik Subburaj is all geared up with the making of his third feature film, ‘Iraivi’. The story of the movie revolves around four persons. As per initial updates, Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil