»   »  ஏமியை வைத்து விஜய், சிவாவை வைத்து விஜய் சேதுபதி கலாய்: சிக்கிய சதிஷ்

ஏமியை வைத்து விஜய், சிவாவை வைத்து விஜய் சேதுபதி கலாய்: சிக்கிய சதிஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: றெக்க படத்தில் எனது பெயரை சிவா என்று மாற்றும் வரை சதிஷின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க. படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது.


விழாவில் ரத்தின சிவா, விஜய் சேதுபதி, சதிஷ், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ரவிக்குமார்

ரவிக்குமார்

நிகழ்ச்சியில் பேசிய ரவிக்குமார் கூறுகையில், விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஒரே ஆசையில் தான் அவருக்கு அண்ணன் வயதில் இருக்கும் நான் அவருக்கு அப்பாவாக நடித்தேன் என்றார்.


சதிஷ்

சதிஷ்

ஆண்டவன் கட்டளை படத்தை பார்த்தேன். அவர் படத்தில் ராஜா போன்று நடந்து வருவதை பார்த்து புல்லரித்துவிட்டது. மாஸ் படங்களில் அவர் அடிக்கடி நடிக்க வேண்டும் என ஒரு ரசிகனாக, அவரது ரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என நகைச்சுவை நடிகர் சதிஷ் தெரிவித்தார்.


ரத்தின சிவா

ரத்தின சிவா

ஒரு படம் ரிலீஸாகாத இயக்குனருக்கு என்ன மரியாதை என்பது சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் விஜய் சேதுபதி என்னிடம் உங்கள் கதை பிடித்துள்ளது, நாம் பண்ணுகிறோம் என்றார். அதற்காக நான் அவருக்கு என்றைக்குமே கடமைப்பட்டவனாக இருப்பேன். வெற்றி நிகழ்ச்சியில் நிறைய பேசலாம் என்றார் இயக்குனர் ரத்தின சிவா.


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

எனக்கு பதட்டமாக உள்ளது. அடுத்தடுத்து ரிலீஸ் கொடுக்கிறீர்களே ஏன் என என்னிடம் கேட்கிறார்கள். கடந்த வாரம் தர்மதுரை, இந்த வாரம் ஆண்டவன் கட்டளை, தற்போது றெக்க இசை வெளியீடு. இது நான் திட்டமிட்டு செய்யவில்லை. அதுவாக நடக்கிறது. றெக்க படத்தில் எனது பெயரை சிவா என்று மாற்றும் வரை சதிஷின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.


English summary
Vijay Sethupathi made fun of comedian Sathish by saying that "We didn't get the call sheet of Sathish until my character name was changed into Shiva in the movie Rekka".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil