»   »  ஆண்டவன் கட்டளை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை மணிகண்டனின் படத் தலைப்பிது!

ஆண்டவன் கட்டளை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை மணிகண்டனின் படத் தலைப்பிது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி - காக்கா முட்டை புகழ் மணிகண்டன் இணையும் புதிய படத்திற்கு ஆண்டவன் கட்டளை என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி தற்போது சீனு ராசாமியின் இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவதா நாயர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Vijay Sethupathi Next Film Title Aandavan Kattalai

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி வட்டாரப் பகுதிகளில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து காக்கா முட்டை புகழ் மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு தற்போது ஆண்டவன் கட்டளை என்று படக்குழுவினர் பெயர் வைத்திருக்கின்றனர். இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத் தலைப்புகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2016 ம் ஆண்டில் இருந்து தொடங்கவிருக்கிறது.இந்த படத்தைப் பற்றி மணிகண்டன் கூறும்போது "ஆண்டவன் கட்டளையில் விஜய் சேதுபதியை இயல்பாக காட்டவிருக்கிறேன்.

இந்தப் படம் என்னை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன்". இவ்வாறு மணிகண்டன் தெரிவித்து இருக்கிறார்.

மற்றொருபுறம் விதார்த் நடிப்பில் மணிகண்டன் இயக்கியிருக்கும் குற்றமே தண்டனை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. பாடல்களே இல்லாத இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று கூறுகின்றனர்.

English summary
Vijay Sethupathi Next Team Up with Kakka Muttai Fame Director Manikandan, the Film Has Been Titled by Aandavan Kattalai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil