twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்யராஜ், அஜித், எஸ்.ஜே.சூர்யா.. இப்போ இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியும்!

    புதிய படத்தில் விஜய் சேதுபதி இசையமைப்பாளராக நடிக்கிறார்

    |

    சென்னை: புதிய படத்தில் விஜய் சேதுபதி எப்படிப்பட்ட இசையமைப்பாளராக இருப்பார் என கேள்வி எழுந்துள்ளது.

    தற்போதைய தமிழ் நடிகர்களில் காலையில் டீசர் மதியம் டிரைலர், மாலையில் அடுத்த படம் ரிலீஸ் என சொல்லும் அளவுக்கு அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதிதான்.

    இந்த ஆண்டிற்கு இன்னும் இரண்டு மிகப்பெரிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. செக்க சிவந்த வானம் மற்றும் 96 திரைப்படங்கள் ரிலீசாக இருக்கின்றன. அடுத்ததாக இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கடகிருஷ்ணா ரகுநாத் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசையமைப்பளாரக நடிக்கிறார்.

    இந்த படத்தைப் பற்றி கூறும்போது இயக்குனர் ரகுநாத், "இட்ஸ ம்யூசிகல் சப்ஜெக்ட் என்று சொன்னாராம்." ம்யூசிகல் சப்ஜெக் என்ற சொல்லும்போது அந்த வடிவேல் காமெடி காட்சி கண்ணில் தோன்றி மறைந்தாலும், தமிழ் சினிமா காட்சிபடுத்திய இசையமைப்பாளர்களிலிருந்து விஜய் சேதுபதி எப்படி மாறுபட்டு நிற்கப்போகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக இரு ்கிறது.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இசை தொடர்பாக எத்தனையோ படங்கள் வந்தாலும், முழுநேர இசையமைப்பாளர்களாக கதாநாயகன் மாறிய படங்கள் அதிகம் கிடையாது. (பாகவதர் கால படங்கள் பாட்டுக்கவே எடுக்கப்பட்டதால் அதை இங்கே குறிப்பிடவிலை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறோம்) வீரா திரைப்படத்தில் பாடகராக ரஜினி நடித்திருப்பார். அதேபோல் கலைஞன் படத்திலும் கமல்ஹாசன் ப டகராகவும் நடனக்கலைஞராகவும் நடித்திருப்பார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் இருவரும் இசைக்கலைஞர்களாக நடித்திருப்பார்கள். மோகன், முரளி, கார்த்தி, ஆனந்த்பாபு, விஜய் என பல நடிகர்கள் பாடகராகவும் நடனக் கலைஞராகவும் நடித்துள்ளனர். இரண்டாயிரத்திற்கு பிறகு என்று எடுத்துக்கொண்டால் இசைக்குழுவாக செயல்பட்டு சித்தார்த், பரத், நகுல், ஜெனிலியா என ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கலக்கினர்.

    பாக்கியராஜ்

    பாக்கியராஜ்

    இசையமைப்பாளர் என்றதுமே சட்டென்று ஞாபகத்திற்கு ஓடிவருபவர் அந்த ஏழு நாட்கள் பாக்கியராஜ். "இ பாலக்காட்டு மாதவன்... என அவர் பேசிய அந்த குரல் இப்போது நினைத்தாலும் காதில் விழுகிறது. இசையமைப்பாளராக முயற்சிக்கும் பாக்கியராஜின் வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகிறது என்பது கதை. வேறு ஒருத்தனை காதலித்த பெண் வலுக்கட்டாயமாக இன்னொரு ஆணை திருமண செய்துகொண்டு, மனதளவில் காதலனை மறக்க முடியாது என சொல்லும்போது, ஏழாவது நாள் கணவனே அவளை காதலனுடன் சேர்த்து வைக்க முயலும்போது, பாக்கியராஜ் பேசும் வசனம் இப்போதும் பேசப்படும் வசனம்.

    அஜித்

    அஜித்

    அதேபோல் முகவரி அஜித்தை விட்டுவிட முடியாது. இசையமைப்பாளராக ஆகியே தீருவேன் என ஒற்றை குறிக்கோளுடன் இருந்து அதனால், காதலையும் தியாகம் செய்வார். ஆனால் படத்தின் இறுதிவரை அவருடைய ஆசை நிறைவேறாமலே போகும். ஒரு கட்டத்தில் குடும்பச் சூழ்நிலை காரணமாக இப்போதைக்கு ம்யூசிக் வேண்டாம். நான் வேலைக்கு போகிறேன் என முடிவெடுத்து வேலைக்கு செல்வார். அதோடு படம் முடிந்துவிட்டதாக எண்ணும்போது, இல்லை அந்த இளைஞன் லட்சியத்தை அடைந்துவிட்டான் என்று இயக்குனர் சொல்வதுபோல, அஜித் மிகப்பெரிய இசையமைப்பாளராக ஆகிவிட்டார் என்று காட்டி நம்மை மகிழ்வித்திருப்பார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று திரிந்த பல இளைஞர்களின் முடிவு என்னவோ மணிவண்ணனிடம் பேசிவிட்டு ரோட்டில் நடந்துபோகும் அஜித்தின் நிலைதான். ஒரு சிலரே சில ஆண்டுகளுக்கு பிறகு என்ற காட்சியில் ஒத்துப்போவார்கள்.

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    மிகப்பெரிய இசை ஜாம்பவான் ஒருவரிடம் வயலின் கலைஞராக இருக்கும் திறமையான இளைஞருக்கு ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்த படம் ஹிட் ஆன பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. புகழின் உச்சியை அடைகிறார். தன்னிடம் வயலின் வாசித்தவன் தன்னைவிட அதிகமாக வளர்கிறானே என பொறாமை கொள்ளும் அந்த மூத்த இசையமைப்பாளர் தன் மகளை வைத்து அந்த இளைஞனை பழி திட்டமிடுவார். இதுதான் எஸ்ஜே.சூர்யா இயக்கி நடித்து இசையமைத்த இசை படத்தின் கதை. துடிப்பான இசைமைப்பாளராக வளரும் எஸ்ஜே.சூர்யா பிரச்சனைகளை சந்திக்கும் போது பொறுமை இழந்து மனநோயாளியாக மாறுவார். கடைசியில் எல்லாம் கனவு என முடிப்பார்கள்.

    இசைக்கருவிகள்

    இசைக்கருவிகள்

    எப்போதுமே ஒரு கதாபாத்திரத்தை ஏற்கும்போது, அது தத்ருபமாக வரவேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கடக்கூடியவர் விஜய் சேதுபதி. அதனால் இசையமைப்பாளராக நடிக்க சில இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு வருகிறாராம். இப்படத்தில் எந்த இசையமைப்பாளரை பின்பற்ற போகிறார், பாலக்காட்டு மாதவன் போல் இசைத்துறையில் சாதிக்க ஆசைப்பட்டு திசைமாறுகிறாரா? அல்லது முகவரி அஜித் போல் முயற்சித்து வெற்றி பெறப்போகிறாரா? அல்லது இசை படத்தின் எஸ்ஜே.சூர்யா போல் கலக்கிவிட்டு கடைசியில் சூதினால் கவ்வப்படுவாரா? என எதிர்பார்ப்பு எட்டிப்பார்க்கிறது. எது எப்படி நடந்தாலும், அவருக்கே உரிய அந்த எதார்த்த புன்னகையோடு நடித்து முடிப்பார் என நம்பலாம்.

    English summary
    Actor Vijay Sethupathi going to play a music director role in his next movie. Now the expectations about the movie is what kind of music director he would be.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X