»   »  'ரெக்கை' கட்டி பறக்கப்போகும் விஜய் சேதுபதி !

'ரெக்கை' கட்டி பறக்கப்போகும் விஜய் சேதுபதி !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கப் போகும் படத்திற்கு 'ரெக்கை' என்று படக்குழுவினர் பெயர் வைத்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி தற்போது தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். மேலும் இறைவி, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், சேதுபதி ஆகிய படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது 'வா டீல்' புகழ் சிவஞானத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். தற்போது இந்தப் படத்திற்கு 'ரெக்கை' என்று படக்குழுவினர் பெயர் சூட்டியிருக்கின்றனர்.

Vijay Sethupathi Next Movie Title Rekka

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்த கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'காதலும் கடந்து போகும்' படம் வருகின்ற 12 ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகிறது.

'சூது கவ்வும்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படமென்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

மடோனா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

English summary
Vijay Sethupathi Next Movie which has been Titled by Rekkai, Directed by Vaa Deal Fame Shiva Gnanam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil