»   »  'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி கையில் தற்போது 10 படங்கள் இருக்கின்றன. இதில் 'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை' ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.

Vijay Sethupathi Next with Cinematographer

'றெக்க', 'வட சென்னை', 'ஆண்டவன் கட்டளை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன.

நீண்டநாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சமீபத்தில் ஒப்புக் கொண்டதாகவும், இதனால் பிற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் பிரேம் குமார் மும்முரமாக இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு சமமான வேடத்தில் நடிக்க ஒரு மூத்த நடிகையை பிரேம் குமார் தேடி வருகிறாராம். கூடிய விரைவில் இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Cinematographer Prem Kumar Direct Vijay Sethupathi's next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil