விஜய் சேதுபதி வந்தியத்தேவனாக நடிக்க விருப்பப்பட்டார்... பார்த்திபன் கூறிய தகவல்

சென்னை: சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி லயோலா கல்லூரியில் பேசிய பேச்சு வைரலாகியுள்ளது

சிலர் அந்தப் பேச்சை விமர்சனம் செய்திருந்தாலும் பலரும் அதனை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடித்திருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஆசைப்பட்டதாக பார்த்திபன் கூறியிருக்கிறார்

ரஜினியின் பேச்சு

ரஜினியின் பேச்சு

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரமோஷனை பொருத்தவரை மிகப்பெரிய புரமோஷன் எதுவென்றால் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதுதான். ஒரு சாதாரண நடிகர் எனக்கு ரியாக்க்ஷன் வரவில்லை என்று கூறினால் நடிக்க தெரியவில்லை என்று கிண்டலடித்து விமர்சிக்கப்படுவார். ஆனால் உயர்ந்த இடத்தில் இருக்கும் ரஜினி தனக்கு தளபதி படத்தில் எக்ஸ்பிரஷன் கொடுக்க தெரியவில்லை என்று கூறியபோது, அவருடைய எளிமை தெரிந்தது. நிலை உயரும் போது பணிவு கொள்ள வேண்டும் என்ற வாக்கியத்திற்கு ஏற்றார் போல ரஜினியின் பேச்சு இருந்தது. அது ஒரு வரலாற்றுப் பேச்சு என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் நட்பு

ஐஸ்வர்யா ராய் நட்பு

இந்தப் படத்தில் நடிக்கும் பொழுது ஐஸ்வர்யா ராயை தான் அதிகமாக கவனித்ததாகவும், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்று ஐஸ்வர்யா தன்னிடம் கூறியபோது இப்போது மட்டுமல்ல மேடையில் நீங்களும் உங்கள் கணவரும் இருக்கும்போது நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் முதற்கொண்டு உங்களது மாமியார் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது வரை நான் கவனித்திருக்கிறேன் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.

ஒத்த செருப்பு

ஒத்த செருப்பு

சில ஆண்டுகளுக்கு முன்னரே வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கெடுத்துள்ளார்கள் பார்த்திபன் மற்றும் ஐஸ்வர்யா ராய். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஐஸ்வர்யாவுக்கு போட்டு காண்பித்ததாகவும், அதன் பின்னர் அபிஷேக் பச்சன், அமிதாப்பச்சன் என்று வரிசையாக பார்த்து பின்னர் அமிதாப்பச்சன் தயாரிப்பில் அபிஷேக் அதன் ரீமேக்கில் நடிக்கும் அளவிற்கு தங்களுடைய நட்பு வளர்ந்தது என்று பார்த்திபன் கூறியிருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கூட லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று ஐஸ்வர்யாவை முன்னே நடக்கச் சொல்ல, பார்த்திபனின் முதுகை தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராய் பின்னே நடந்தது இணையதளத்தில் பிரபலமானது

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்நிலையில் எண்பதுகளின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் வந்தியத்தேவனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று எப்படி கூறினார்களோ, அதேபோல 90-களின் தொடக்கத்தில் அதனை எடுத்தால் தனக்கு கூட அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். என்னுடைய நிஜ கதாபாத்திரத்தை ஒட்டி அமைந்ததுதான் வந்தியத்தேவன் கதாபாத்திரம். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடும். இப்போதுள்ள நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருந்ததாக கூறப்படுகிறது என்று பார்த்திபன் பல சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X