For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புஷ்பா 2 படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி...இதுதான் காரணமா ?

  |

  சென்னை : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது.

  தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த படம் தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்த சூழலிலும் 450 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்த படம்.

  ஆந்திராவின் சேஷாச்சலம் வனப்பகுதியில் பல ஆண்டுகளாக நடக்கும் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். செம்மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக தொடங்கி, மிகப்பெரிய கடத்தல் தாதாவாக புஷ்பா எப்படி உருவாகிறான் என்பது தான் படத்தின் கதை.

  ரஜினியை ஏமாற்றிய முதல்வர் கருணாநிதி..அபூர்வ ராகங்கள் சுவாரஸ்யம்ரஜினியை ஏமாற்றிய முதல்வர் கருணாநிதி..அபூர்வ ராகங்கள் சுவாரஸ்யம்

  கமர்ஷியல் ஹிட்

  கமர்ஷியல் ஹிட்

  விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடியான பாடல்கள் மனதை ஈர்க்கும் காதல் காட்சிகள் என புஷ்பா படம் மிகச்சிறப்பான கமர்சியல் திரைப்படமாக வெளியானது. படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவிற்கு குறிப்பிடத் தகுந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சமந்தா அயிட்டம் டான்ஸ் ஆடிய ஊ சொல்றியா பாடல் படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை பெற்று தந்தது.

  5 வில்லன்களின் மிரட்டல்

  5 வில்லன்களின் மிரட்டல்

  வில்லன்களாக பகத் பாசில், தனஞ்செய், சண்முக், சுனில், அனுசுயா பரத்வாஜ் அஜய் கோஸ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு, ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

  வெளிநாட்டில் படமாகும் புஷ்பா 2

  வெளிநாட்டில் படமாகும் புஷ்பா 2

  புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்தினார். அவர் எப்படி சர்வதேச டானாக வளர்கிறார் என்பது குறித்த காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.இதை மெகா பட்ஜெட் படமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  வேற லெவலில் ஹிட்டாக்க பிளான்

  வேற லெவலில் ஹிட்டாக்க பிளான்

  படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டாலும், புஷ்பா 2 படத்தின் ஷுட்டிங்கை இனி தான் முறையாக துவங்க ஏற்பாடு நடந்து வருகிறது.இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மட்டுமின்றி மற்றொரு டாப் ஹீரோயின் நடிக்க உள்ளதாகவும், சமந்தாவிற்கு பதில் பாலிவுட் நடிகை ஒருவர் அயிட்டம் சாங் ஆட போவதாகவும் சொல்லப்படுகிறது.

  Recommended Video

  Vinodhini | அவன் ஒரு ஆள் கிடையாது , வன்மம் உள்ள பெரிய டீம் அவங்க எல்லாரும் | *INTERVIEW
  விஜய் சேதுபதி விலக இதுதான் காரணமா?

  விஜய் சேதுபதி விலக இதுதான் காரணமா?

  ஜவான் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கப்பட்டுள்ள அதே தேதியில் தான் புஷ்பா 2 படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட சீன்கள் படம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே தேதியில் இரண்டு படங்களில் எவ்வாறு நடிக்க முடியும் என கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே புஷ்பா 2 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  English summary
  Recently there were rumours that claimed Vijay Sethupathi had been roped to play a negative character in Allu Arjun starrer Pushpa 2, along with in Shah Rukh Khan starrer Jawan. Now, the actor’s publicist Yuvraaj has denied Vijay’s involvement in the Sukumar directorial.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X