இவர் எனக்கு ஜோடியா... இளம் நடிகைக்கு நோ சொன்ன விஜய் சேதுபதி... காரணம் தெரிஞ்சா அசந்துடுவீங்க

சென்னை : இந்திய சினிமாவிலேயே இப்ப பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான் என்பது அனைவரும் அறிந்தது தான். பல மொழிகளிலும், ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை, விஜேஎஸ் 46, மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ், மைக்கேல், பாலிவுட்டில் வெப் சீரிஸ் என நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் பல படங்களில் நடிக்கவும் அவரிடம் பேசப்பட்டு வருகிறது.

பல படங்களில் வாய்ப்பு

பல படங்களில் வாய்ப்பு

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் அடுத்தபடியாக நடிக்க உள்ள தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமான தலைவன் இருக்கிறான் படத்தில் நாசர் நடித்த மாயன் கேரக்டரின் மகனாக வில்லன் ரோலில் நடிக்கவும் விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறது. இது தவிர பிரேம் குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட டைரக்டர்களின் படங்களில் நடிக்கவும் விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருகிறது.

இளம் நடிகைக்கு நோ

இளம் நடிகைக்கு நோ

அப்படி விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வரும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை கிருத்தி ஷெட்டியை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பேசி உள்ளனர். ஆனால் கிருத்தி ஷெட்டிக்கு ஜோடியாக தான் நடிக்க முடியாது என மறுத்து விட்ட விஜய் சேதுபதி, வேறு ஏதாவது நடிகையை நடிக்க வையுங்கள் என கண்டிப்பாக கூறி விட்டாராம்.

இவரா இப்படி சொல்றார்

இவரா இப்படி சொல்றார்

வயதான தோற்றம், ஹீரோ, வில்லன், சிறிய ரோல் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் திறமையான நடிகர் என பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, கிருத்தி ஷெட்டிக்கு ஜோடியாக நடிக்க எதற்காக நோ சொல்கிறார் என பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் குழம்பி போய் விட்டனராம். இதுவரை தான் நடிக்கும் படங்களில் ஹீரோயின், கதை, கேரக்டர் என எதிலும் விஜய் சேதுபதி மாற்றம் ஏதும் பண்ண சொல்லி கேட்டதில்லையாம்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

இது பற்றி விஜய் சேதுபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, விஜய் சேதுபதி தெலுங்கில் அறிமுகமான உபன்னா படத்தில் கிருத்தியும் நடித்துள்ளார். அதுவும் விஜய் சேதுபதிக்கு மகள் ரோலில் நடித்திருந்தார். மகளாக நடித்த நடிகையுடன், ரொமான்ஸ் காட்சிகளில் தன்னால் நடிக்க முடியாது என்பதால் தான் அவருடன் நடிக்க விஜய் சேதுபதி நோ சொல்லி விட்டாராம். இதை கேட்ட தயாரிப்பாளர் அசந்து போய் விட்டார்களாம்.

இப்படி ஒரு சென்டிமென்ட்டா

இப்படி ஒரு சென்டிமென்ட்டா

சிவாஜி, ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் பலர் ஒரு காலத்தில் தங்களுக்கு மகளாக நடித்த நடிகைகளுடன், பிறகு ஜோடியாக நடித்துள்ளனர். ஜோடியாக நடித்த நடிகைகள் பலர் பிறகு அந்த நடிகர்களுக்கு அம்மா கேரக்டரிலும் நடித்துள்ளனர். இப்படி இருக்கையில் விஜய் சேதுபதி இப்படி ஒரு சென்டிமென்ட்டை கடைபிடிப்பதை கேட்டு கோலிவுட்டை ஆச்சரியப்பட்டு போய் உள்ளதாம்.

பிஸியான செப்டம்பர் மாதம்

பிஸியான செப்டம்பர் மாதம்

விஜய் சேதுபதி தற்போது நடிப்பதில் மட்டுமல்ல டிவி.,யில் மாஸ்டர் செஃப் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் மட்டும் விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. செப்டம்பர் 9 ம் தேதி விஜய் சேதுபதி நடித்த லாபம் படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது. செப்டம்பர் 9 ல் துக்ளக் தர்பார் நேரடியாக சன் டிவி.,யிலும், செப்டம்பர் 11 ம் தேதி நெட்ஃபிளிக்சிலும் ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, டாப்சி, யோகி பாபு நடித்த அனபெல் சேதுபதி படம் செப்டம்பர் 17 ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X