»   »  விஜய் சேதுபதியின் தர்ம துரை... ஆடியோ டிராக் லிஸ்ட் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் தர்ம துரை... ஆடியோ டிராக் லிஸ்ட் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள தர்மதுரை படத்தின் ஆடியோ ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பற்றிய டிராக் லிஸ்ட் இப்போது வெளியாகியுள்ளது.

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Vijay Sethupathi’s dharmadurai Audio list

இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தர்மதுரை திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Dharmadurai with Vijay Sethupathi in the lead is all set for release. The producers have decided to release the film by August end. The audio launch is now confirmed and date will be August 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil