twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குமுதா ஹாப்பி அண்ணாச்சி.. கலக்கிய விஜய் சேதுபதி.. படம் வெளியாகி 9 ஆண்டுகள்!

    |

    சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியான படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம்.

    ரௌத்திரம் படத்தை இயக்கியிருந்த கோகுல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார்

    இந்தப் படத்தில் குமுதாவாக நடித்திருந்த சுவாதியை ஓருதலையாக காதலிக்கும் சுமார் மூஞ்சு குமாராக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

     விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் 'அற்புதமான' பர்ஃபாமன்ஸ்..மிரண்டுபோய் பாராட்டும் ஹிர்த்திக் ரோஷன் விக்ரம் வேதா விஜய் சேதுபதியின் 'அற்புதமான' பர்ஃபாமன்ஸ்..மிரண்டுபோய் பாராட்டும் ஹிர்த்திக் ரோஷன்

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம்

    இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம்

    நடிகர்கள் விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியான படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. ரௌத்திரம் என்ற படத்தை இயக்கிய கோகுல், காமெடி களத்தில் இந்தப் படத்தை இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது.

    ஓருதலைக் காதல்

    ஓருதலைக் காதல்

    குமுதாவாக நடித்த நந்திதாவை ஒருதலையாக காதலிப்பார் விஜய் சேதுபதி. இதில் அவர் நடித்திருந்த சுமார் மூஞ்சு குமாரு கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் கிளைக்கதையாக அஸ்வின் மற்றும் காதல் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதற்கு விஜய் சேதுபதியின் உதவி என்று கதை செல்லும். படத்தின் திரைக்கதை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

     குமுதா ஹாப்பி அண்ணாச்சி

    குமுதா ஹாப்பி அண்ணாச்சி

    குறிப்பாக படத்தில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்று விஜய் சேதுபதி செய்யும் காமெடி வேற லெவல் ரகம். அதேபோல ப்ரெண்ட்டு, பீல் ஆயிட்டாரு என்ற டயலாக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியிருந்தார். விஎஸ் ராஜ்குமார் தயாரித்திருந்தார். மொத்தத்தில் படம் எளிமையான திரைக்கதை, வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகளுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    9 ஆண்டுகளை கடந்த படம்

    9 ஆண்டுகளை கடந்த படம்

    தற்போது இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கேரியரில் மிகச்சிறப்பாக இந்தப் படம் கைக்கொடுத்த நிலையில், இந்தப் படத்தின் 9 ஆண்டு கொண்டாட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

    ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

    சித்தார்த் விபின் இசையில் படத்தின் பாடல்களும் மிகச்சிறப்பாக அமைந்தன. குறிப்பாக என் வீட்டில் நானிருந்தேனே, ப்ரே பண்ணுவேன் போன்ற பாடல்கள் தற்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவைகளாக அமைந்துள்ளன. இதேபோல ஏனென்றால் உன் பிறந்தநாள் என்ற பாடலும் மெலடியின் பின்னி பெடலெடுத்தது.

    கமர்ஷியல் ஹீரோ

    கமர்ஷியல் ஹீரோ

    தற்போது கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஜவான் படத்தில் ஷாருக்கிற்கு வில்லனாகவும் மிரட்டி வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் கிராமத்துக் கதைக்களங்களில் நடித்துவந்த இவருக்கு கமர்ஷியலாக வொர்க் அவுட் ஆன படம் என்றால் அது இந்தப் படம்தான். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

    English summary
    Vijay Sethupathi's Itharkku thane Aasaipattai balakumara movie completes 9 years
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X