»   »  'கருவா கருவா பயலே...' - விஜய் சேதுபதி பட பாடல்கள் வெளியீடு!

'கருவா கருவா பயலே...' - விஜய் சேதுபதி பட பாடல்கள் வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'ரேனிகுண்டா' படத்தை இயக்கிய ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.

முதலில் ரித்திகா சிங் நடிப்பதாக தான் இருந்தநிலையில் அவர் மற்ற படங்களில் பிஸியாகிவிட்டதால் இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழுவினர். படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் அவர் விலகிவிட, அதன் பின்னர் தான் 'பலே வெள்ளையத் தேவா', 'பிருந்தாவனம்' படத்தில் நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார்.

Vijay Sethupathi's karuppan audio songs released

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Vijay Sethupathi's karuppan audio songs released

யுகபாரதியின் வரிகளுக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியிருக்கிறது. சற்று முன்பு இப்படத்தின் பாடல்களை டி.இமான் வெளியிட்டார். செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

English summary
Vijay sethupathi play a lead role in 'Karuppan' movie which based on jallikattu. 'Karuppan' audio songs are out now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil