»   »  விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்... யுவனின் அசத்தல் அறிவிப்பு!

விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்... யுவனின் அசத்தல் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கலக்கி வரும் விஜய் சேதுபதியின் அனைத்து படங்களும் பாக்ஸ்-ஆபிஸில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம்.

தற்போது விஜய் சேதுபதி பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் யுவன் ஷங்கர் ராஜாவின் உறவினர் ஹீரோவாக அறிமுகமாகும் 'பேய்பசி' என்ற படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்தத் தகவலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது யதார்த்த நடிப்பாலும், பேச்சாலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராகி விட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் '96', 'சூப்பர் டீலக்ஸ்', 'செக்கச் சிவந்த வானம்', 'ஜூங்கா', 'சீதக்காதி' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

புதிய அவதாரம்

புதிய அவதாரம்

இந்நிலையில், விஜய் சேதுபதி சினிமா உலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'பேய்பசி' படத்தின் மூலம் விஜய் சேதுபதி பாடகராக அறிமுகமாகிறார்.

யுவன் இசையில்

இது தொடர்பாக யுவன் ஷங்கர் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "என் இசையில் உருவாகி வரும் 'பேய்பசி' படத்துக்காக விஜய் சேதுபதி பாடுகிறார். எனது கஸின் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்குகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

பேய்பசி

பேய்பசி

'பேய்பசி' படத்தில் அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி இப்படத்தில் பாடவிருப்பதால் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

English summary
Vijay Sethupathi now turned as a singer. He has sung a song for 'Peipasi' movie in Yuvan Shankar Raja's music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil