»   »  கருப்பன்.... விஜய் சேதுபதி - பன்னீர் செல்வம் படத்தின் தலைப்பு!

கருப்பன்.... விஜய் சேதுபதி - பன்னீர் செல்வம் படத்தின் தலைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் சேதுபதி - ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இணையும் புதிய படத்துக்கு கருப்பன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழும் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டு மட்டும் 6 படங்களில் நாயகனாக நடித்து சாதனைப் படைத்தார்.

Vijay Sethupathi's next movie titled as Karuppan

இந்த 2017-லும் அவரது ஆதிக்கம் தொடர வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டுக் கணக்கை தனது 'புரியாத புதிர்' படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்குப் பிறகு கவண் படம் வெளி வரவிருக்கிறது. அதன் பிறகு விக்ரம் வேதா படம் வரவிருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்து ரேணிகுண்டா புகழ் பன்னீர் செல்வம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஏ எம் ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கருப்பன் எனத் தலைப்பிட்டுள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்துக் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி இமான் இசையமைக்கிறார்.

ஜனவரி 11-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

English summary
Vijay Sethupathy's next movie with Renigunta Panneer Selvam has been titled as Karuppan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil