»   »  இன்று முதல் 'றெக்க' கட்டிப் பறக்கப்போகும் விஜய் சேதுபதி - லட்சுமி மேனன்!

இன்று முதல் 'றெக்க' கட்டிப் பறக்கப்போகும் விஜய் சேதுபதி - லட்சுமி மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி- லட்சுமி மேனன் நடிக்கும் 'றெக்க' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

'நானும் ரவுடிதான்', 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்' என்று ஹாட்ரிக் ஹிட்டடித்து மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி.


இதனால் 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்', 'இறைவி', 'மெல்லிசை', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'விக்ரம்-வேதா', 'ஆண்டவன் கட்டளை', கே.வி.ஆனந்தின் அடுத்த படம் என முக்கால் டஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன.


Vijay Sethupathi's Rekka Starts with Pooja

இதில் 'இறைவி', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன. 'தர்மதுரை' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் 'றெக்க' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.


Vijay Sethupathi's Rekka Starts with Pooja

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனனும், வில்லனாக ஹரிஷ் உத்தமனும் நடிக்கவுள்ளனர். முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் ஒப்பந்தமாகியிருக்கிறார்.


டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Vijay Sethupathi's Rekka Starts with Pooja Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil