»   »  ஆக்சன் நாயகனாக விஜய்சேதுபதி... மதுரையில் ‘கில்லி’ அடிக்கும் றெக்க... அசத்தல் டீசர்!

ஆக்சன் நாயகனாக விஜய்சேதுபதி... மதுரையில் ‘கில்லி’ அடிக்கும் றெக்க... அசத்தல் டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்னா சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக முதன்முறையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது றெக்க படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார் என்பது டீசரைப் பார்த்தாலே புரிகிறது.


Vijay Sethupathi's 'Rekka' teaser released

சேதுபதி படத்தில் போலீசாகவும், நானும் ரவுடி தான் படத்தில் ரவுடியாகவும் பட்டையைக் கிளப்பிய விஜய் சேதுபதி, இப்படத்தில் வித்தியாசமான ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


டீசரில் வெளியாகியுள்ள காட்சிகளைப் பார்க்கும் போது, மதுரையைக் களமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இப்படம் மற்றொரு 'கில்லி'யாக சொல்லியடிக்கும் என நம்பலாம்.


இப்படத்தின் டீசர் தற்போது சமூக வளைதளங்களில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று பகிரப்பட்டு வருகிறது.


இதோ, றெக்க படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் உங்களுக்காக..!

English summary
The teaser of Vijay Sethupathy and Lakshmi Menon starrer 'Rekka' has finally come out.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos