'சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவங்கதான்... தேசிய விருது பெற்ற நாயகி ரிட்டர்ன்!
Recommended Video

சென்னை : 'சீதக்காதி' படத்திற்காக விஜய்சேதுபதி போட்டுள்ள வயதான கெட்டப் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அடையாளமே தெரியாத அளவுக்கு மேக்கப் போட்டு வயதான கெட்டப்பில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சீதக்காதி
வித்தியாசமான கதைகளிலும், கேரக்டர்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் 'சீதக்காதி'யும் ஒன்று. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இப்படத்தை இயக்குகிறார்.

மூன்று நாயகிகள்
இது ஹீரோவாக விஜய் சேதுபதியின் 25 ஆவது படம். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். மூன்று நாயகிகளுமே இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி ஜோடி
'சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பழைய நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. 'வீடு' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற அர்ச்சனா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் 'ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தில் நடித்திருந்தார்.

வயதான வேடத்தில் விஜய் சேதுபதி
'சீதக்காதி' படம் முழுவதும் வயதான கெட்டப்பிலேயே விஜய்சேதுபதி நடிக்கிறார். ஏற்கனவே 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தில் ஓல்டு கெட்டப்பில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் தோல்வியைச் சந்தித்தது.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள்
'சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதியின் வயதான கேரக்டருக்கான மேக்கப்பை ஹாலிவுட் மேக்-அப் கலைஞர்களான கெவின் ஹனே, அலெக்ஸ் நேபிள் ஆகியோர் உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் ஆஸ்கர் விருது பெற்றவர்கள்.

மேக்கப்பை கலைக்க 1 மணி நேரம்
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு மேக்-அப்பைப் போடுவதற்கு 4 மணி நேரம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. மேக்கப்பை கலைப்பதற்கு 1 மணி நேரம் ஆனதாம். இந்த மேக்கப் மூலம் தான் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார் விஜய் சேதுபதி.


Click it and Unblock the Notifications











