twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான்.. நானே சரித்திரமாக மாறி விட்டேனே”.. உருக வைக்கும் ‘சீதக்காதி’!

    |

    Recommended Video

    சீதக்காதி ட்ரைலர் விமர்சனம்- வீடியோ

    சென்னை: விஜய் சேதுபதியின் 25வது படமான சீதக்காதியின் டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகியுள்ளது.

    பாலாஜி தரணிதரனின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பை வரவழைத்த இந்த படத்தில் '...ப்பா' மற்றும் 'மெடுல்லாஆப்லகேட்டா' என விஜய் சேதுபதி சொல்லும் பல டயலாக்குகளும் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

    இந்நிலையில் மீண்டும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில் வயதான அய்யா கதாபாத்திரத்தைப் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    முன்னணி நடிகர்:

    முன்னணி நடிகர்:

    இந்த டிரெய்லர் மூலம் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பிரபல நடிகர் என்பது தெரிகிறது. அவரது படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. வயதான மற்றும் இளமையான என இரண்டு கதாபாத்திரத்திலும் அவரே நடிக்கிறார். முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போது ரசிகர்கள் எப்படி திருவிழாவாகக் கொண்டாடுவார்களோ அதைப் போலவே அய்யா பட ரிலீசை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒரு காட்சியில் பாரதிராஜாவும் அய்யாவைப் பாராட்டுகிறார்.

    நடுவுல கொஞ்சம் அய்யாவை காணோம்:

    நடுவுல கொஞ்சம் அய்யாவை காணோம்:

    ஆனால், இது ஒருபுறம் இருக்க திடீரென காணாமல் போகிறார் அய்யா. அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இதனால் கோபத்திலும், குழப்பத்திலும் இருக்கின்றனர். இனி, அய்யாவை சினிமாவிலேயே நடிக்கவிடக் கூடாது எனும் அளவிற்கு அவர்கள் ஆவேசமாகப் பேசுகின்றனர்.

    தனிமையில் அய்யா:

    தனிமையில் அய்யா:

    இதற்கிடையே, அமைதியில் தனிமையில் இருக்கிறார் அய்யா. டிரெய்லரில் பாதி வரை அய்யாவைக் காணோம். அவரைப் பற்றிய பில்டப் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. பாதிக்கு மேல் அய்யா வரும் காட்சிகளிலும் சோகம் இழையூடுகிறது. ஒரு சிறுவனை தோளில் வைத்து தூங்க வைக்கிறார். ஏன் இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் ஒரு வயதான நடிகர் சோகத்தில், யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்கிறார் என்ற கேள்வியையும், அதற்கான பதிலையும் எதிர்பார்க்க வைக்கிறது இந்த டிரெய்லர்.

    இதுவும் கொலை தான்:

    இதுவும் கொலை தான்:

    டிரெய்லரின் ஒரு காட்சியில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் இயக்குநர் ராம், ‘ஆளைக் கொல்வது மட்டுமல்ல, ஒருவரது உணர்ச்சிகளைக் கொல்வதும் கொலை தான்' என ஆவேசமாகப் பேசுகிறார். இதன் மூலம் ஏதோ அவமானகரமான சம்பவம் அல்லது மோசமான விமர்சனத்தை அய்யா சந்தித்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

    சோகமான வசனம்:

    சோகமான வசனம்:

    ஆனால், டிரெய்லரின் இறுதியில் மேடைக் காட்சி ஒன்றில் அரசர் வேடத்தில் தோன்றுகிறார் அய்யா. ‘ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான்.. நானே சரித்திரமாக மாறி விட்டேனே..' என அவர் சோகமாகப் பேசுவதுடன் டிரெய்லர் முடிவடைகிறது. இது அவர் காணாமல் போவதற்கு முன் படத்தில் இடம் பெறும் காட்சியா, இல்லை அதற்குப் பின் வரும் காட்சியா எனத் தெரியவில்லை.

    வயதான கதாபாத்திரம்:

    வயதான கதாபாத்திரம்:

    தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, இப்படத்திலும் மூன்று வித கெட்டப்புகளில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு கேரக்டர்களின் தோற்றங்களை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்று வயதான அய்யா கதாபாத்திரம்.

    எதிர்பார்ப்பு:

    தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரில் அந்த அய்யா கதாபாத்திரக் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது தான் படத்தின் கதைக்களமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அப்படியென்றால், மீதமிருக்கும் இரண்டு கெட்டப்புகளுக்கும் இன்னும் கனமான காட்சிகள் இருக்கலாம், அவை பிளாஷ்பேக் காட்சிகளாக படத்தில் இடம் பெறுபவையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Vijay Sethupathi starrer Seethakathi film trailer is trending in social medias.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X