»   »  தாஸ், சுமார் மூஞ்சி குமார், பாண்டியை மிஞ்சுவாரா இந்த 'சேதுபதி'?

தாஸ், சுமார் மூஞ்சி குமார், பாண்டியை மிஞ்சுவாரா இந்த 'சேதுபதி'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிப்பது, ஹீரோயின் ரம்யா நம்பீசன், பண்ணையாரும் பத்மினியும் இயக்குநர் அருண்குமார் என்று எக்கசக்க எதிர்பார்புகளுடன் நாளை 'சேதுபதி' திரைப்படம் வெளியாகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ரவுடியாக நடித்திருந்தார். படத்தைத் தூக்கி நிறுத்தியது நயன்தாரா என்றாலும், காமெடி ரவுடியாக விஜய் சேதுபதியும் கவர்ந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.


இந்நிலையில் தனது பீட்சா ஹிட் ஹீரோயின் ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடித்திருக்கும் சேதுபதி திரைப்படம் நாளை வெளியாகிறது.


போலீசாக விஜய் சேதுபதி ஜெயிப்பாரா என்ற கேள்விக்கான விடை நம்மிடம் இல்லை என்றாலும் என்னென்ன காரணங்களுக்காக சேதுபதியை பார்க்கலாம் என்று பார்த்து விடுவோம்.


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சூது கவ்வும் தாஸ், சுமார் மூஞ்சி குமார், நானும் ரவுடிதான் பாண்டி என்று எல்லா வேடங்களுக்கும் பொருந்திப் போகும் விஜய் சேதுபதி கண்டிப்பாக சேதுபதி வேடத்திலும் அசத்தியிருப்பார்.


ஆக்ஷன் ஹீரோ

ஆக்ஷன் ஹீரோ

போலீஸ் படமென்பதால் ஏற்றிய உடம்புடன் ஆக்ஷன் காட்சிகளில் விஜய் சேதுபதி மிரட்டி எடுத்திருப்பதாக கூறுகின்றனர். படத்தின் புரோமோ காட்சிகளிலும் அது நன்றாக தெரிகிறது. விஜய் சேதுபதியை ஆக்ஷன் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுபவர்கள் தாராளமாக சேதுபதியை பார்க்கலாம்.


கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

பீட்சாவில் கலக்கிய விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். 2 குழந்தைகளுடன் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நம்பிக்கை எழுகிறது.


நோ பஞ்ச்

நோ பஞ்ச்

இவரின் படங்களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமென்பதால் பஞ்ச் வசனங்கள் மற்றும் ஹீரோக்களின் என்ட்ரி பாடல் ஆகியவை கண்டிப்பாக இருக்காது.


இந்தக் காரணங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தாலும் ரவுடி போல போலீஸ் வேடத்திலும் விஜய் சேதுபதி ஜொலிப்பாரா? என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.English summary
Vijay Sethupathi- Remya Nambeesan Starrer 'Sethupathi' Released Tommorrow, Written& Directed by S.U.Arun Kumar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil