TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
ஹேப்பி பர்த்டே சொன்ன ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசு கொடுத்த விஜய் சேதுபதி!
சென்னை: பிறந்தநாளையொட்டி, அருண்குமார் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.
தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது.

பேட்ட படத்தைத் தொடர்ந்து மாமனிதன், சூப்பர் டீலக்ஸ் மற்றும் சைரா நரசிம்மரெட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' என இரண்டு வெற்றிப் படங்களை இயக்கிய அருண்குமார், மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அப்படத்திற்கு சிந்துபாத் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதியின் லுக் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இறைவியைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாகி இருக்கிறார் அஞ்சலி. இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 😍#Sindhubaadh first look poster 😍@thisisysr @yoursanjali @Rajarajan7215 @VANSANMOVIES @irfanmalik83 @mounamravi @CtcMediaboy pic.twitter.com/tFHvt5qdwE
— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2019
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது அதன் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.