ஆசைப்பட்டா யோசிக்காம சாப்பிடணும்.. அப்புறம் அதை பண்ண மறந்துடக் கூடாது.. விஜய்சேதுபதியின் நச் பதில்!

சென்னை: விஜய்சேதுபதி மற்ற ஹீரோக்களை ஃபிட்டான உடம்பையோ, சிக்ஸ்பேக் உடம்பையோ பேணுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு மட்டும் அவரது சம்பளம் 100 கோடி என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ரஜினிகாந்த், விஜய், அஜித் ஹீரோவாக நடித்து ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து 3 முதல் 4 படங்களில் அள்ளி விடுகிறாராம்.

இது ஒரு பக்கம் இருக்க, ஆசைப்பட்டா யோசிக்காம சாப்பிடணும் என யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒல்லியாக இருந்தவர் தான்

ஒல்லியாக இருந்தவர் தான்

தனுஷின் புதுப்பேட்டையில் ஓரமாக நடித்தது முதல் அவர் ஹீரோவாக அறிமுகமான தென்மேற்கு பருவக்காற்று, அடுத்து வந்த பீட்ஸா உள்ளிட்ட படங்களிலும் ஒல்லியாகத்தான் இருந்தார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் எல்லாம் பார்த்தால், இது விஜய்சேதுபதியா என இப்போ இருக்கிற ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். கிரே ஷேட் படங்களில் நடிக்க இயக்குநர்களின் வற்புறுத்தலின் பேரில் கொஞ்சம் கொஞ்சமாக சதை போட தற்போது கன்ட்ரோலே இல்லாமல் வளர்ந்து நிற்கிறார்.

முரட்டுத் தீனி

முரட்டுத் தீனி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி படங்களில் தனது உடம்பை கணிசமாக ஏற்றி நடித்தார் விஜய்சேதுபதி. மேலும், விக்ரம் வேதா படத்தில் வில்லனாக நடிக்க அவர் அதிகரித்த எடையை பின்னர் அவர் பலமுறை முயற்சி செய்தும் திரும்பவும் கன்ட்ரோல் பண்ணவே முடியல. உடல் எடையை அதிகரிக்க முரட்டுத் தீனி சாப்பிட்டது தான் விளைவு என்கின்றனர்.

ஆசைப்பட்டா யோசிக்காம சாப்பிடணும்

ஆசைப்பட்டா யோசிக்காம சாப்பிடணும்

சினிமாவில் ஹீரோக்களாக இருக்கும் பலர் சிக்ஸ் பேக் உடம்போடு 60 வயது 70 வயதானாலும் தங்களுக்கு பிடித்த உணவை கூட உண்ணாமல் இருக்கும் நிலையில், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆசைப்பட்டால் யோசிக்காம சாப்பிடணும் என நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப்க்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

என்னை மாதிரி இருந்துடாதீங்க

என்னை மாதிரி இருந்துடாதீங்க

மனசுக்கு பிடிச்சதை சாப்பிட்டு சந்தோஷமா இருங்க, அதற்கு பிறகு உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்றதை விட்றாதீங்க, நான் அதை பண்றதில்லை. என்னை மாதிரி நீங்களும் இருந்துடாதீங்க என நடிகர் விஜய்சேதுபதி தனக்கே உரிய தக் லைஃப் பதிலை கூறியுள்ளார்.

100 கோடி வருமானமா

100 கோடி வருமானமா

அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திலிருந்து விஜய்சேதுபதி வெளியேற காரணமே ராணுவ வீரருக்கான உடல் எடையை அவரால் கொண்டு வர முடியாதது தான் என்கின்றனர். ஆனால், அதை பற்றியெல்லாம் மனுஷன் கவலைப்படாமல் வில்லனாக நடித்தே மூன்று முதல் நான்கு படங்களில் 100 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X