கோடியை கொட்டி கொடுக்கும் பாலிவுட்...ஜவானுக்காக விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

சென்னை : "ராஜா ராணி", "தெறி", "பிகில்", "மெர்சல்" என கோலிவுட்டில் அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் படங்களாக கொடுத்த டைரக்டர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். "ஜவான்" திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Recommended Video

Liger Movie Review | Yessa ? Bussa ? | |Vijay Deverakonda|Ananya Panday|Ramya Krishna|Puri Jagannadh

மேலும் பாலிவுட் முன்னணி ஹீரோயின் தீபிகா படுகோனும் இப்படத்தில் இணைகிறார்.இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.யோகிபாபுவும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

மும்பையை தொடர்ந்து சமீபத்தில் ஜவான் படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கப்பட்டது. இதற்காக சென்னை வந்து இறங்கிய நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன், அட்லீ ஆகியோரின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

சென்னையில் ஜவான் ஷுட்டிங்

சென்னையில் ஜவான் ஷுட்டிங்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த செய்தியை அவரே அண்மையில் உறுதிப்படுத்தி இருந்தார். இது தவிர கெஸ்ட் ரோலில் விஜய்யும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா

விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா

இந்த நிலையில் இந்தப்படத்திற்காக விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகி, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது கேரியரில் விஜய் சேதுபதி அதிகம் சம்பளம் வாங்கிய படம் இது தான் என சொல்லப்படுகிறது.

ஏன் இந்த திடீர் உயர்வு

ஏன் இந்த திடீர் உயர்வு

விக்ரம் படத்தில் தனது நடிப்பு மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்டதையடுத்து இந்த சம்பள உயர்வை அவர் செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்திற்காக விஜய் சேதுபதி 10 கோடிகளை மட்டுமே சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தில் கிடைத்த வரவேற்பிற்கு பிறகு விஜய் சேதுபதி தனது சம்பளத்தை 15 கோடி முதல் 21 கோடி வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

வில்லனுக்கு கொட்டி கொடுக்கும் பாலிவுட்

வில்லனுக்கு கொட்டி கொடுக்கும் பாலிவுட்

ஜவான் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாகவும், இதனால் ஜவான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷாருக்கான், விஜய் சேதுபதி கேட்டதை விட அதிக சம்பளம் தர ஓகே சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய், சூர்யா பாணியில் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X