Don't Miss!
- News
"நெருங்கிய பேரழிவு.." இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத போர்? மைக் பாம்பியோ பகீர்
- Sports
சார் நீங்களா.. இந்திய இளம் வீரர்களுக்கு சர்ஃப்ரைஸ் தந்த எம்.எஸ்.தோனி..நீண்ட நேர ஆலோசனை..என்ன நடந்தது
- Finance
3000 ஊழியர்கள் பணிநீக்கம்.. SAP அறிவிப்பால் டெக் ஊழியர்கள் அதிர்ச்சி..!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விக்னேஷ் சிவன் கதை சொல்லும்போது தூங்கிட்டேன்.. விஜய் சேதுபதிக்கே இந்த நிலைமையா!
சென்னை: விக்னேஷ் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்
முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் முதலில் கதை கூறும் போது தூங்கி விட்டேன் என கூறியுள்ளார்
மிரட்டும் சந்தீப் கிஷன் புது பட போஸ்டர்… இதிலும் விஜய் சேதுபதி வில்லனா ?

பாலிவுட் வரை
நடிகர் விஜய் சேதுபதியின் புகழ் இப்பொழுது தென்னிந்தியாவையும் கடைந்து பாலிவுட் வரை சென்றுள்ளது. அதற்கு காரணம் அவர் நடிக்கும் கதைகளும், படங்களில் பிரம்மாண்ட வெற்றியும் தான். ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க பெரும்பாலான முன்னணி நடிகர்கள் ஒப்புக் கொள்வதில்லை . ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் சேதுபதி கதையை மட்டும் கருத்தில் கொண்டு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளார்.

விஜய் சேதுபதி கலக்குவார்
அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து பட்டையை கிளப்பியதைத் தொடர்ந்து பல மொழிகளிலிருந்து விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிகிறது. இதுவரை தென்னிந்திய அளவில் மட்டும் பிரபலமாக இருந்த விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் கலக்கியது போலவே ஹிந்தியிலும் விஜய் சேதுபதி ஒரு கலக்கு கலக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

நானும் ரவுடிதான்
போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இப்பொழுது தமிழில் முன்னணி இயக்குனராக உள்ளார். காதலை ரெண்டிங்காக சொல்வதில் மிகவும் சிறப்பானவர் என பெயர் எடுத்த விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் நானும் ரவுடிதான் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இரண்டாவது முறை காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் இணைந்துள்ளது. நயன்தாரா,விஜய் சேதுபதி,சமந்தா என முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் ரசிகர்களால் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கதை சொல்லும்போது தூங்கிட்டேன்
நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் என விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து இரண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் கதையை முதல் முறையாக விக்னேஷ் சிவன் கூறும்போது விஜய்சேதுபதி தூங்கி விட்டாராம். அந்த அளவிற்கு அந்த கதையில் ஒன்றுமே இல்லையாம். ஏன் கிளைமாக்ஸ் கூட முடிக்கப்படாமல் இருந்ததாம். அதன்பிறகு கதையில் மாற்றங்கள் செய்து நானும் ரவுடியாக படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது இந்த தகவலை விஜய் சேதுபதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.