»   »  நம்ம சேதுபதி இனி தெலுங்குலேயும் டப்பிங் பேசப் போறாராம்!

நம்ம சேதுபதி இனி தெலுங்குலேயும் டப்பிங் பேசப் போறாராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தற்போது தமிழில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். அந்த அளவுக்கு அவர் காட்டில் அடைமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.

ஆந்திராவை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'சைரா' படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிறது.

200 பிரிட்டிஷ் நடிகர்கள்

200 பிரிட்டிஷ் நடிகர்கள்

சுதந்திர போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் நடிகர்கள் நடிக்கிறார்கள். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்று மொழிகளில் தயாராவதால், விஜய்சேதுபதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், சைரா நரசிம்மரெட்டி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், விரைவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதில், விஜய்சேதுபதி, சுதீப் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். தனது படங்களின் தெலுங்கு ப்ரொமோஷன்களில் தெலுங்கில் சரளாக பேசி அசத்தியுள்ள விஜய் சேதுபதி, தற்போது தான் நடித்து வெளியாகியுள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்திலும் பல காட்சிகளில் தெலுங்கில் பேசி நடித்துள்ளார்.

தெலுங்கில் டப்பிங்

தெலுங்கில் டப்பிங்

இதையடுத்து, சிரஞ்சீவியுடன் நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் தனக்குத்தானே தெலுங்கில் டப்பிங் பேச முடிவு செய்துள்ளாராம் விஜய் சேதுபதி. தமிழில் அவர் பேசும் ஒன் லைனர்ஸ் வரவேற்பைப் பெறுவதைப் போல தெலுங்கிலும் அவர் குரலிலேயே பேசும் வசனங்கள் ஹிட் அடிக்குமா பார்க்கலாம்.

English summary
Vijay Sethupathi plays a significant role in the film Chiranjeevi's Sye raa Narasimha Reddy in ​​Telugu. Vijay Sethupathi has decided to talk to dubbiing in Telugu for 'Sye raa Narasimha Reddy'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil