விஜய் சேதுபதி - சந்தீப் கிஷன் காம்போ சாதித்ததா இல்லையா?: மைக்கேல் ட்விட்டர் விமர்சனம்
சென்னை: விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் நடித்துள்ள மைக்கேல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் ஜானரில் மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக ரிலீஸான மைக்கேல் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மைக்கேல் படத்திற்கு நெட்டிசன்களிடம் கிடைத்துள்ள டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

ரெட்ரோ ஆக்ஷன் ட்ரீட்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், புரியாத புதிர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. அவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள மைக்கேல் திரைப்படம் இன்று வெளியானது. விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன், கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே மைக்கேல் டீசர், ட்ரெய்லர் வெளியாகி இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது இந்நிலையில், மைக்கேல் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டிவிட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேக்கிங்கில் அசத்திய மைக்கேல்
மைக்கேல் மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியானதால் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், முதல் பாதியில் விஷுவல், சினிமோட்டோகிராபி எல்லாம் ஹாலிவுட் தரத்தில் உள்ளன. சந்தீப் கிஷனின் ஸ்டைல் சூப்பராக ஒர்க்அவுட் ஆகியுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல் இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் அருமையாக வந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.

அல்டிமேட் ஆக்ஷன் டிராமா
இன்னொரு நெட்டிசன், மைக்கேல் ஒரு ஸ்டைலிஷான பழிவாங்கும் டிராமா என குறிப்பிட்டுள்ளார். ஆக்ஷான் சீன்ஸ் அட்டகாசமாக வந்துள்ளதாகவும், சந்தீப் கிஷனின் ஆக்டிங் சூப்பர் எனவும் பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக மைக்கேல் படம் ரசிகர்களுக்கானது என ட்வீட் செய்துள்ளார்.

பக்கா கமர்சியல் படம்
மைக்கேல் திரைப்படம் ஆர்க் ஏஞ்சல் கதைகளில் வரும் கடவுள் vs அரக்கன், விதிகள் vs ஃப்ரீவில் போன்ற பல தீம்களுடன் எடுக்கப்பட்டுள்ளன. மைக்கேல் & லூசிஃபர் இந்த இரண்டு கேரக்டர்களும் அவர்களின் சுதந்திரத்தை நிறைவேற்ற பெயர் பெற்றவர்கள். இது இறுதியில் கடவுளின் விருப்பத்தில் என்னவாகிறது என்பது தான் கதை என கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் மைக்கேல் பக்கா கமர்சியலாக ரசிகர்களுக்கு எண்டர்டெயின் செய்யக்கூடிய படமாக உருவாகியுள்ளது. எமோஷனல் டிராமா, ஆக்ஷன் சீன்ஸ், சினிமோட்டோகிராபி, பின்னணி இசை எல்லாம் படத்துக்கு பலம் என்றுள்ளார்.

மைக்கேல் படத்தின் மைனஸ்
அதேபோல் மைக்கேல் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துள்ளன. அதில் மைக்கேலுக்கு 2.75 ரேட்டிங் கொடுத்துள்ள நெட்டிசன் ஒருவர், படம் சுமாராக இருக்கிறது, ஆனால் டெக்னிக்கலாக மட்டுமே ரசிக்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும், பழைய கேங்ஸ்டர் டிராமா கதையை கொஞ்சம் ஸ்டைலிஷாக கொடுத்துள்ளனர் என விமர்சித்துள்ளார். இன்னொரு நெட்டிசன் முதல் பாதிக்கு மேல் பார்க்க முடியவில்லை என ஓபனாக தெரிவித்துள்ளார். அதேபோல் டெக்னிக்கலாக மட்டுமே மைக்கேல் பார்க்கலாம் எனவும், நல்ல நடிகர்களை சரியாக பயன்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் பாதி - கேஜிஎஃப் மீதி
மேலும், மைக்கேல் முழுவதுமே கேஜிஎஃப் படத்தின் சாயலோடு இருப்பதாகவும், அது முடியும் போது கமலின் விக்ரம் படத்தை நினைவுப்படுத்துவதாகவும் நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். மொத்தமாக மைக்கேல் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தபடி படம் ஹிட் அடிக்குமா என்பது முதல் வாரத்தின் முடிவில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











