»   »  நம்ம 'வேதா' இப்போ தெலுங்கில் வில்லன்!

நம்ம 'வேதா' இப்போ தெலுங்கில் வில்லன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : நடிகர் விஜய் சேதுபதியின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்றால் இரு கதாநாயகர்கள் படம் என்றாலும் ஏற்றுக்கொள்ளும் நடிகர் என்பதால் சினிமா உலகில் அவரது மரியாதை உயர்ந்துள்ளது. அவரை வைத்துப் படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் மொய்க்கின்றனராம்.

இந்நிலையில், விஜய் சேதுபதி அடுத்து தெலுங்குப்படம் ஒன்றில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 'சைரா' எனப் பெயர்சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தின் ஹீரோவாக மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Vijay sethupathi in telugu movie

மேலும், இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, இவர்களுடன் அமிதாப் பச்சன், சுதீப், ஜெகபதி பாபு ஆகியோரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சுரேந்திர ரெட்டி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிவந்தனர். இந்நிலையில் இப்போது படத்திற்கு இசையமைக்க ரஹ்மான் ஒப்புக்கொண்டுள்ளார்.

Vijay sethupathi in telugu movie

ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு சற்று முன்பு வெளியிடப்பட்டது.

English summary
Vijay Sethupathi acts as a villian in telugu movie 'sye raa'. Chiranjeevi and nayanthara plays a lead role in sye raa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil