மீண்டும் மல்டி ஹீரோ கதையில் விஜய் சேதுபதி...இப்போ இணைய போகும் 2 ஹீரோக்கள் இவங்க தான்

சென்னை : தனது கலகலப்பான நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைவரையும் கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு வில்லன் ரோல்களிலும் அதிகம் நடிக்க துவங்கி விட்டார் விஜய் சேதுபதி. ஹீரோ, மல்டி ஹீரோ, வில்லன் என ஒரே சமயத்தில் பல படங்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார்.

இதுவரை 50 க்கும் அதிகமான படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். இவர் கமல் நடித்த நம்மவர் படத்திலேயே நடித்திருக்க வேண்டியதாம். ஆனால் அப்போது உயரம் போதவில்லை எனக்கூறி விஜய் சேதுபதியை ஆடிஷனில் நிராகரித்து விட்டார்களாம். மாஸ்டர் படத்தில் மட்டுமல்ல சசிக்குமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்திலும் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் தான் நடித்திருந்தார்.

காத்திருக்கும் விஜய் சேதுபதி படங்கள்

காத்திருக்கும் விஜய் சேதுபதி படங்கள்

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் தனது நடிப்பு திறமையை காட்டி அசத்தி வரும் விஜய் சேதுபதி, அங்கும் டாப் நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்து விட்டார். தமிழில் இவர், ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்த லாபம் உள்ளிட்ட பல படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரமில் கமலுக்கு வில்லன்

விக்ரமில் கமலுக்கு வில்லன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் 5 வில்லன்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் கமல், ஃபகத் ஃபாசில், அர்ஜுன் தாஸ், நரேன் போன்றோருடன் இணைந்து நடிக்கிறார். விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு மல்டி ஹீரோ படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்

மீண்டும் மல்டி ஹீரோ படம்

மீண்டும் மல்டி ஹீரோ படம்

பான் இந்தியன் படமாக தயாராக உள்ள இந்த படம் ராணுவத்தை பின்புலமாகக் கொண்ட படம். இதில் விஜய் சேதுபதியுடன் சன்தீப் கிஷன் மற்றும் ஆதி ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க உள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை புரியாத புதிர், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்க போகிறார். விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

டிவி தொகுப்பாளர் அவதாரம்

டிவி தொகுப்பாளர் அவதாரம்

தற்போது திட்டதட்ட ஒரு டஜன் படங்கள் விஜய் சேதுபதியின் கைவசம் உள்ளது. படங்களில் நடிப்பதுடன் சன் டிவி.,யில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் என்ற பிரபல சமையல் நிகழ்ச்சியையும் தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதே நிகழ்ச்சியை தெலுங்கில் ஜெமினி டிவி.,யில் தமன்னா தொகுத்து வழங்க உள்ளார்.

அடுத்தடுத்து குவியும் வாய்ப்புக்கள்

அடுத்தடுத்து குவியும் வாய்ப்புக்கள்

விஜய், கமல் ஆகியோரைத் தொடர்ந்து ரஜினி, அஜித் படங்களிலும் விஜய் சேதுபதியை வில்லன் ரோலில் நடிக்க வைக்கவும் பேசப்பட்டு வருகிறதாம். ஹீரோ, வில்லன் என படத்திற்கு படம் தனது ரோல்களில் வித்தியாசம் காட்டி நடித்து வருவதால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேதுபதி 2 படமும் எடுக்க போகிறார்களாம். இதிலும் விஜய் சேதுபதியையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X