உங்க சங்காத்தமே வேண்டாம்.. பிக்பாஸிலிருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?.. அடி பலமோ?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை எட்டாவது சீசனிலிருந்து தொகுத்து வழங்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. அவரது தொகுத்து வழங்கும் முறை இந்த சீசனில் மாறியிருந்தாலும் பெரிய திருப்தியை தரவில்லை என பலரும் கூறிவருகிறார்கள். அதுமட்டுமின்றி போட்டியாளர்களிடன் அத்துமீறல்களையும் அவரால் சமாளிக்கவே முடியவில்லை என்ற குரல்களும் கேட்டவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த சீசனோடு விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன்வரை அவர் தொகுத்து வழங்கியபோது பலரும் பார்த்து ரசித்தார்கள். வாராவாரம் ஒரு புத்தகத்தை பரிந்துரைப்பது, போட்டியாளர்கள் அத்துமீறும்போது தனக்கேயுரிய பாணியில் அதை தடுப்பது, கண்டிப்பது என நிகழ்ச்சியை தனது ஸ்டைலில் பக்காவாக கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

விஜய் சேதுபதி என்ட்ரி: ஆனால் திடீரென அவர் இதிலிருந்து விலகுவதற்கு முடிவு செய்து விலகிவிட்டார். அதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத என்ட்ரியாக விஜய் சேதுபதி உள்ளே வந்தார். எட்டாவது சீசனிலிருந்து இந்த பொறுப்பை அவர் ஏற்றார். அவர் பொறுப்பேற்ற முதல் சீசனில் தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு சென்றார் சேது. அதேசமயம் அவர் ஸ்ட்ரிக்ட்டாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது.

Vijay Sethupathi to Quit Bigg Boss Season 9 Shocking Reports Surface
Photo Credit:

மாறிய சேதுபதி: சூழல் இப்படி இருக்க ஒன்பதாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்க நாளிலிருந்தே விஜய் சேதுபதி தனது அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வந்தார். திவாகரிடம் பக்குவமாகவும், அதேசமயம் கண்டிப்பாகவும் அறிவுரை சொன்னது, வீட்டுக்குள் எல்லை மீறும் போட்டியாளர்களை ஸ்ட்ரிக்ட்டாக கண்டிப்பது என நல்லபடியாகவே சென்றுகொண்டிருந்தது.

ஓவராக செய்யும் போட்டியாளர்கள்: ஆனால் நாட்கள் செல்ல செல்ல வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இஷ்டத்துக்கு நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த வாரத்தில் விஜய் சேதுபதியை வைத்துக்கொண்டே துஷாரும், கம்ரூதினும் அடித்துக்கொள்வதுபோல் சென்றார்கள். இதனை அவர் கண்டித்தாலும் அந்த கண்டிப்பில் அவ்வளவு வீரியம் இல்லை என்பதே பலரின் கருத்தாக இருந்தது. மேலும் போட்டியாளர்களை பேசவிடவே மறுக்கிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

பிரவீன் காந்தி காட்டம்: வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட இயக்குநர் பிரவீன் காந்திகூட விஜய் சேதுபதி குறித்து பேட்டிகளில் விமர்சனத்தைத்தான் முன்வைத்துவருகிறார். இப்படி தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் வந்துகொண்டே இருப்பதால் அவரது இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆக ஆரம்பித்திருக்கிறது. எனவே அவர் இந்த சீசனோடு பிக்பாஸுக்கு பெரிய கும்பிடு போட்டு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமென அவரது ரசிகர்களும் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

விலகுகிறார் சேது?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தன்னை பற்றி தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை சேது கவனித்துவருவதாகவும்; இனி பிக்பாஸ் தொகுப்பாளர் ரோல் ஒத்துவராது என முடிவு செய்து இந்த சீசனோடு விலகவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X