'96' பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகர் விஜய் சேதுபதி.. வெளியானது கலக்கல் அப்டேட்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி இப்பொழுது தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம்,கடைசி விவசாயி,காத்து வாக்குல ரெண்டு காதல், பீஸ்ட், விக்ரம்,அனபெல் சேதுபதி,துக்ளக் தர்பார் என பல திரைப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இதில் துக்ளக் தர்பார் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது.

புதுமுக இயக்குனர்கள் முன்னணி இயக்குனர்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் நல்ல கதைகளில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்பொழுது 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வித்தியாசமான கதைகளாக

வித்தியாசமான கதைகளாக

அசுரத்தனமான நடிப்பின் மூலம் அசுர வளர்ச்சியை எட்டி இருக்கும் விஜய் சேதுபதிக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட்டிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. விஜய் சேதுபதி ஒரு படத்தில் கமிட்டானால் அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அதேபோல படங்களும் ரசிகர்கள் ரசிக்கின்றவாறு வித்தியாச வித்தியாசமான கதைகளாக வெளியாகிக் கொண்டுள்ளது . சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய பரிமாணத்தை காட்டியிருந்தார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம்,என எது கொடுத்தாலும் அதை தனது இயல்பான நடிப்பின் மூலம் வெளுத்துக்கட்டும் விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் துளிகூட நல்லவன் இல்லாத வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் பல ஆக்ஷன் காட்சிகள் வைக்கப்பட்டிருக்க படம் முழுவதும் தெறிக்க விட்டது.

வில்லனாக

வில்லனாக

மாஸ்டர் படத்தைப் பார்த்த அனைவரும் விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டாட அடுத்தடுத்து ஒப்பந்தமாகும் திரைப்படங்களிலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்களே போராடி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அணுகப்பட்டது ஆனால் படக்குழு கேட்ட தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் புஷ்பா படத்தில் நடிக்காமல் போனது . இப்பொழுது அதே கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்துவருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பாலிவுட்டில் ரீமேக்

பாலிவுட்டில் ரீமேக்

இயக்கிய மூன்றே திரைப்படத்தில் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம்,கைதி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த பிறகு மூன்றாவதாக விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். மாநகரம்,கைதி திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வர அதைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படமும் பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஒருவரின் நடிப்பில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது . இந்த நிலையில் தனது கலையுலக குருவான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். கறி சோறு, லாரி என வழக்கமான பாணியில் விக்ரம் திரைப்படமும் உருவாகிவர இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேசமயம் பகத் பாசிலும் இதில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

நேரடியாக தொலைக்காட்சியில்

நேரடியாக தொலைக்காட்சியில்

கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விஜய்சேதுபதிக்கு தமிழில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. லாபம்,கடைசி விவசாயி, மாமனிதன்,இடம் பொருள் ஏவல், துக்ளக் தர்பார்,யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்து வாக்குல ரெண்டு காதல், அனபெல் சேதுபதி, விடுதலை என அடுத்தடுத்த ஹிட் படங்கள் வெளியாக தயாராகி வருகிறது. முதல் முறையாக பக்கா அரசியல்வாதி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராகி கொண்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகிறது. வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாக உள்ளது.

Recommended Video

96 ல இந்த scene தேவையான்னு கேட்டார் | BALAJI & C.PREM KUMAR CHAT PART - 02 | Filmibeat Tamil
96 காதல் காவியமாக

96 காதல் காவியமாக

இந்தநிலையில் தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் காதல் காவியமாக வெளியான "96" அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. எந்த ஒரு சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மனதுக்கு இதமான காதல் படமாக வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருந்தார். தமிழில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்த 96 தெலுங்கில் ஜானு என்ற பெயரில் சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தது. கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது .

பிரேம்குமார் உடன் மீண்டும் இணையும்

பிரேம்குமார் உடன் மீண்டும் இணையும்

அறிமுக இயக்குனர் பிரேம்குமார் 96 படத்தை இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே வெற்றிக் கொடியை நாட்டிய பிரேம்குமாருக்கு சோதனையாக இப்படத்தின் கதை தன்னுடையது என ஒரு சிலர் கதை திருட்டு குற்றங்களை சாட்டினர் . அந்த பிரச்சினை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான வேலையில் இயக்குனர் பிரேம்குமார் மும்முரமாக இறங்கி இருக்க 96 வெற்றியைத் தொடர்ந்து அடுத்து இயக்கும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே பல மொழிகளில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்க அவைகளை எல்லாம் நடித்து முடித்துவிட்டு இயக்குனர் பிரேம்குமார் உடன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதனை அறிந்த 96 பட ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X