»   »  மோடி அரசை பங்கமாக கலாய்த்த விஜய் சேதுபதி #OruNallaNaalPaathuSolren

மோடி அரசை பங்கமாக கலாய்த்த விஜய் சேதுபதி #OruNallaNaalPaathuSolren

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மக்களின் கருத்து

சென்னை : அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடித்து இன்று வெளியாகி இருக்கிறது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம்.

வித்தியாசமான கான்செப்ட் பிடித்து இயக்குநர் அசத்த, வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ரசிகர்களின் செம வரவேற்போடு தியேட்டகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 'ஒரு நாள் பாத்து சொல்றேன்'.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை வித்தியாசமான கான்செப்ட் பிடித்து அட்வென்ச்சர் காமெடி படமாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார். இப்படத்தின் கதைக்களம் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் எமசிங்கபுரம் எனும் ஊர் தான்.

எமசிங்கபுரம்

எமசிங்கபுரம்

விஜய் சேதுபதி எமன் எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். "உழைச்சு உண்மையா திருடணும்" என்பதுதான் இந்தக் குலத்தினரின் கொள்கை. அதற்காக ஒவ்வொரு கால இடைவெளியிலும் சிலர் மட்டும் கொள்ளை அடிப்பதற்காக வெளியூர்களுக்குச் செல்வார்கள்.

கொள்ளையர்கள்

கொள்ளையர்கள்

அப்படி, எமனிடம் குறிகேட்டு கொள்ளையடிப்பதற்காக ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரோடு தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்குச் செல்வார் விஜய் சேதுபதி. அங்கு நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தங்கள் ஊருக்குச் செல்வார்கள்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தான் செய்த சத்தியத்திற்காக, சென்னையிலிருந்து ஹீரோயின் நிஹாரிகாவையும் கடத்திச் செல்வார் விஜய் சேதுபதி. எமசிங்கபுரத்திற்குச் சென்று விஜய் சேதுபதிக்கும் நிஹாரிகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும்.

தட்டுநிறைய 2000 நோட்டு

தட்டுநிறைய 2000 நோட்டு

நிச்சயதார்த்தத்திற்காக சீர் கொண்டு செல்லும்போது விஜய் சேதுபதிக்கு அருகே ஒருவர் தட்டு நிறைய புது 2000 ரூபாய் நோட்டுகளைக் குவித்து வைத்து எடுத்து வருவார். அப்போது விஜய் சேதுபதி டயலாக் சொல்லி டீமானிட்டைசேஷனை கலாய்ப்பார்.

டீமானிட்டைசேஷனை கலாய்த்த விஜய் சேதுபதி

டீமானிட்டைசேஷனை கலாய்த்த விஜய் சேதுபதி

"மொதல்ல இதைக் கொண்டுபோய் கீழ இருக்கிற மக்களுக்குக் கொடு.. இந்தக் காசையும் அப்புறம் செல்லாதுனு அறிவிச்சிருவாங்க" என டைமிங்கில் சொல்லி, திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்த மோடி அரசைக் கலாய்த்திருக்கிறார்.

English summary
Vijay Sethupathi, Gautham Karthik starring 'Oru nalla naal paathu solren' movie directed by Arumuga Kumar. A scene of this film will have over 2000 rupees notes. At this scene, Vijay sethupathi trolls Modi government's demonetization scheme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil