எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மட்டி...ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
சென்னை : இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம் என வர்ணிக்கப்பட்டுள்ள படம் மட்டி (Muddy). இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

புதுமுக இயக்குனரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விறுவிறு ஆக்ஷன் காட்சிகள், சாகசங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் புதுமையான சினிமா அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு வழங்கும் என கூறப்படுகிறது.
இப்படம் பற்றி டைரக்டர் பிரகபல் கூறுகையில், காதல், ஆக்ஷன், மண் சாலை ரேஸ் ஆகியவற்றின் கலவை தான் இப்படம். 5 ஆண்டுகள் மண் சாலை பந்தயம் பற்றி ஆய்வு செய்த பிறகே, இப்படத்தை இயக்கும் பணியில் இறங்கினேன்.
புதுமையான படங்களை ஊக்குவிப்பதில் முதன்மையானவர் விஜய் சேதுபதி. அவர் எங்கள் படத்தின் ஃபஸ்ட்லுக்கை வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றார்.
முற்றிலும் புதுமுகங்களை வைத்தே இப்படம் இயக்கப்பட்டுள்ளது. முக்கிய நடிகர்களுக்கு ரோடு ரேசிங் பற்றிய தனிப்பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், டூப் ஏதும் பயன்படுத்தவில்லை எனவும் டைரக்டர் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சாகசம் நிகழ்த்துவதில் ஆர்வம் இருப்பவர்களை மட்டுமே இப்படத்திற்காக தேர்வு செய்தேன் என்றார்.


Click it and Unblock the Notifications











