»   »  ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாரா?

ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி- வீடியோ

சென்னை : ரஜினி ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய இருக்கிறார்.

இப்படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. அதோடு அவர்களது படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சமீபத்தில்தான் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி


இந்த நிலையில் இப்படத்தின் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா என்பது படக்குழு அறிவித்தால் தான் தெரியும்.

நடிக்கலாம்

நடிக்கலாம்

ஏற்கெனவே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா' படத்தின் மூலம் நன்கு கவனிக்கப்பட்டார் விஜய் சேதுபதி. அடுத்து அவர் இயக்கிய ‘இறைவி' படத்திலும் ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா


ஆகவே, இந்தப் படத்திலும் அவர் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் 'விக்ரம் வேதா' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளதால் இந்த படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ரஜினியுடன் முதல் படம்

ரஜினியுடன் முதல் படம்

ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு விஜய் சேதுபதி வில்லன் ஆனால், இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்குமே கொண்டாட்டம் தான்.

English summary
As reported that, Vijay sethupathi will act with rajinikanth in karthik subbaraj’s upcoming film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil