»   »  வடசென்னை படத்தில் இருந்து விலகிட்டேங்க, ஆனால் தனுஷுடன்...: விஜய் சேதுபதி

வடசென்னை படத்தில் இருந்து விலகிட்டேங்க, ஆனால் தனுஷுடன்...: விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக விஜய் சேதுபதியே தெரிவித்துள்ளார்.

தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் படம் வட சென்னை. அமலா பால் நாயகியாக நடிக்கிறார். நீண்ட காலமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.


கேங்ஸ்டர் படமான இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமானார்.


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வட சென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கடந்த சில வாரங்களாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இது உண்மை என்று தெரிய வந்துள்ளது.


விலகல்

விலகல்

வட சென்னை படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக விஜய் சேதுபதியே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனுஷுடனோ, வெற்றிமாறனுடனோ எந்த மனஸ்தாபமும் இல்லாமல் வெளியேறியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


டேட்ஸ்

டேட்ஸ்

டேட்ஸ் பிரச்சனையால் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறியதாக விஜய் சேதுபதி கூறியுள்ளார். விஜய் சேதுபதி நடித்துள்ள கவண் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வீணடிப்பு

வீணடிப்பு

விஜய் சேதுபதி டேட்ஸ் கொடுத்தும் அதை தனுஷும், வெற்றிமாறனும் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர்கள் படப்பிடிப்பை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்ததால் விஜய் சேதுபதியின் பிற படங்களின் டேட்ஸுக்கு பிரச்சனையானது. அதனாலேயே அவர் படத்தில் இருந்து வெளியேறினார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.


English summary
Vijay Sethupathi said that he walked out of director Vetrimaran's movie Vada Chennai starring Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil