»   »  காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி

காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புரியாத புதிர் படத்தில் விஜய் சேதுபதி நிர்வாணமாக நடித்ததாக இயக்குனர் ரஞ்சித் பா. ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் பா. ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படம் அண்மையில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக போகவில்லை.

இந்நிலையில் விஜய் சேதுபதியை இயக்குனர் பாராட்டியுள்ளார்.

ரெயின் கோட்

ரெயின் கோட்

ஒரு காட்சியில் விஜய் சேதுபதி ரெயின் கோட் அணிந்து மழையில் நிற்க வேண்டும். மழைநீர் பட்டு ரெயின்கோட் சாயம் போய் கண்ணாடி போன்று ஆகும். இந்த காட்சியில் விஜய் சேதுபதி நிர்வாணமாக நடித்தார் என்கிறார் ரஞ்சித்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ரெயின் கோட் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று விஜய் சேதுபதி வெறும் 10 சதவீத உடையே அணிந்து நடித்தார். காட்சிக்காக மெனக்கெடுபவர் விஜய் சேதுபதி என்று இயக்குனர் பாராட்டியுள்ளார்.

இயக்குனர்

இயக்குனர்

பெரிய ஹீரோவாக இருந்தாலும் இயக்குனர் சொல்வதை கேட்டு அப்படியே நடிப்பவர் விஜய் சேதுபதி. அவரை இயக்குவது எளிது என்று ரஞ்சித் பா. ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஷில்பா

ஷில்பா

வித்தியாசமான கெட்டப்புகள், கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் திருநங்கையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Ranjit Jeyakodi said that Vijay Sethupathi acted with just 10 percent clothes on his body for a scene in Puriyatha Puthir.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil