Don't Miss!
- News
வருமான வரி விலக்கு.. அது என்ன 3 லட்சம், 7 லட்சம்? நிர்மலா அறிவிப்பால் குழம்பிய மக்கள்.. இதோ விளக்கம்
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Finance
Budget 2023: பட்ஜெட் எதிரொலி.. சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சங்கமித்ரா சரிபட்டு வரல.. மீண்டும் கலை அலங்காரத்தை கூப்பிட்டு அரண்மனை 4 செட் போட வேண்டியது தான்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இயக்குநர் மணிரத்னம் வெற்றி பெற்ற நிலையில், சங்கமீத்ராவை தூசி தட்டி மீண்டும் எடுத்து விடலாம் என லைகாவை சந்திக்க லண்டன் வரை சென்று வந்தார் இயக்குநர் சுந்தர் சி.
ஆனால், இப்போதைக்கு சங்கமித்ரா திரைப்படத்திற்கு லைகா நிறுவனம் செவி சாய்க்கவில்லை என தெரிகிறது. உடனடியாக அரண்மனை 4ம் பாகத்தை ஆரம்பிக்கும் முடிவில் குதித்து விட்டார் இயக்குநர் சுந்தர். சி.
ஒவ்வொரு பார்ட்டிலும் கதாநாயகர்களை மாற்றி வரும் சுந்தர் சி 4ம் பாகத்தில் நடிகர் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொன்னியின் செல்வன் சாதனையை முறியடிக்கும் பதான்... பாய்காட் ட்ரோல் எல்லாம் பொய்யா கோபால்?

சங்கமித்ரா எடுக்க ஆசை
அன்பே சிவம், அருணாச்சலம் என சூப்பர் ஹீட் படங்களை கொடுத்த இயக்குநர் சுந்தர் சி சமீப காலமாக காமெடி படங்களை இயக்கி வருகிறார். அவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை 2 திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சங்கமித்ரா எனும் சரித்திர படத்தை இயக்கலாம் என்கிற முடிவுடன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்து இருந்தார்.

கிடப்பில் கிடக்கிறது
பாகுபலி, பொன்னியின் செல்வன் போல சரித்திர படம் என்பதால் சட்டு புட்டுன்னு அந்த படத்தை எடுத்து விட முடியாது. அதற்கான ஏகப்பட்ட ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை இயக்குநர் சுந்தர் சி செய்து வருகிறார். அந்த படத்தை ஆரம்பிக்காத நிலையில், ஆர்யா வைத்து அரண்மனை 3 படத்தை இயக்கினார். ஆனால், முதல் 2 பாகங்கள் பெற்ற வெற்றியை அரண்மனை 3 பெறவில்லை.

லண்டன் வரை சென்றும்
பொன்னியின் செல்வன் படத்தை லைகா தயாரித்து பெரிய வெற்றி பெற்ற நிலையில், இப்போ எப்படியாவது அந்த சங்கமித்ரா படத்தை ஆரம்பித்து விடலாம் என்கிற முடிவுடன் லண்டனுக்கு சென்று சுபாஸ்கரனை சந்தித்து வந்தார் இயக்குநர் சுந்தர் சி. பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2, இந்தியன் 2 என பிசியாக இருக்கும் லைகா நிறுவனம் அடுத்ததாக ரஜினிகாந்தின் 2 படங்களை தயாரிக்க உள்ளது. இந்நிலையில், சுந்தர் சியின் சங்கமித்ரா படம் மேலும், சில ஆண்டுகள் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனை 4
அரண்மனை முதல் பாகத்தை இயக்கி நடித்திருந்தார் சுந்தர் சி. அந்த படத்தில் அவருக்கு அடுத்து ஹீரோவாக வினய் நடித்திருந்தார். ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2ம் பாகத்திலும் ஹன்சிகா இருந்தார் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக வெளியான அரண்மனை 3ம் பாகத்தில் ஆர்யாவும் அவருக்கு ஜோடியாக ராஷி கன்னாவும் நடித்திருந்தனர். இந்த முறை ஆர்யாவே பேயாக நடித்தும் படம் ஒர்க்கவுட் ஆகவில்லை.

விஜய்சேதுபதி ஹீரோ
அரண்மனை 4ம் பாகத்தை அடுத்ததாக இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடிக்க உள்ளார். இந்த முறை அவருடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 4ம் பாகத்தில் நடித்த ராஷி கன்னாவே இந்த முறையும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாவாரா? அல்லது வேறு நடிகைகள் யாராவது இணைவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.

பேய் படங்களில் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் ஆனதே பீட்ஸா எனும் ஹாரர் படத்தில் தான். டாப்ஸி உடன் அனபெல் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த பிசாசு 2 படத்திலும் அவர் நடித்துள்ளார். அந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 படத்திலும் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.