»   »  பழங்குடி மக்கள் கதை... 8 வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி!

பழங்குடி மக்கள் கதை... 8 வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் முறையாக பழங்குடிகள் கதை ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இந்தப் படத்துக்கு ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்கிறேன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

ஆறுமுக குமார் என்பவர் இயக்கும் இப்படத்தில் நிகரிகா கொனிடேலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கௌதம்

கௌதம்

இப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது.

பழங்குடி இன தலைவன்

பழங்குடி இன தலைவன்

இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடியின தலைவராக நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது.

8 வேடங்கள்

8 வேடங்கள்

இப்படத்தின் விசேஷமே விஜய் சேதுபதி 8 வேடங்களில் நடிப்பதுதான் என தகவல் வெளியாகி உள்ளது. பழங்குடியின தலைவரான விஜய் சேதுபதி நகரத்துக்கு வருவதுபோல படத்தின் கதையை அமைத்துள்ளார்கள்.

பழங்குடி சடங்குகள்

பழங்குடி சடங்குகள்

படத்தின் இரண்டாம் பாதியை முழுவதும் காட்டுக்குள்ளேயே படமாக்கியுள்ளார்களாம். பழங்குடியின மக்கள் பின்பற்றும் தனித்துவ சடங்குகளை பற்றியே கதை நகர்வதால் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிக்க வேண்டியிருந்ததாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடைசி கட்டத்தில்

கடைசி கட்டத்தில்

படத்தின் பெரும்பான்மைப் பகுதியை படமாக்கிவிட்டார்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் தொடங்குகிறது.

English summary
Vijay Sethupathy is going to appear in 8 get ups for one of his upcoming movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil