»   »  காத்துவாக்குல ரெண்டு காதல்... விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நயன்தாரா- த்ரிஷா!

காத்துவாக்குல ரெண்டு காதல்... விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நயன்தாரா- த்ரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீனியர் நடிகைகளுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்கிறார் விஜய் சேதுபதி. முன்பு நானும் ரவுடிதான் படத்துக்காக நயன்தாராவுடன் இணைந்தவர், அடுத்து நயன்தாரா - த்ரிஷாவுடன் ஜோடி போடுகிறார்.

இது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்காக.

Vijay Sethupathy to be paired with Nayan and Trisha

இந்தப் படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர்.

ஏ எம் ரத்னம் தயாரிக்கிறார். நானும் ரவுடிதான் வெற்றியடைந்த கையோடு முடிவான படம்தான் இது. இப்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் பழைய ஜோடி நயன்தாரா. இன்னொருவர் த்ரிஷா. அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி ஏற்கெனவே ஆறு படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் துவண்டு கிடந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் நானும் ரவுடிதான் என்பதால், விக்னேஷ் சிவன் கேட்டதும் மறுக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

English summary
Vijay Sethupathy is going to be paired with two senior actresses Nayanthara and Trisha in his next Kaathuvakkula Rendu Kadhal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil