»   »  நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி... கிசுகிசு பற்றி கவலையே இல்லையாம்!

நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி... கிசுகிசு பற்றி கவலையே இல்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னேறி வருகிறார் விஜய் சேதுபதி. இமேஜ் பார்க்காமல் எந்த ரோலாக இருந்தாலும் தன்னை நிரூபிப்பதால் அவரை சுற்றி இயக்குநர்கள் மொய்க்கிறார்கள். அப்படி இமேஜ் பார்க்காமல் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் படம்தான் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்'.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறாராம். இருவரும் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர்கள். காயத்ரி நடித்திருக்கும் 5 படங்களில் 4 படங்கள் விஜய் சேதுபதியுடன் நடித்தவை.


Vijay Sethupathy - Gayathri pairs for 4th time

இதுகுறித்துக் கேட்டால் இருவருமே எங்களுக்கு கிசுகிசு பற்றி கவலை இல்லை என்ற தொனியில் பேசுகிறார்களாம்.


ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யாவுடனும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் கவலைப்படாமல், வாய்ப்பு அமைந்தால் மீண்டும் சேர்வோம் என்று கூறியது நினைவிருக்கலாம்.

English summary
Actress Gayathri has paired up with Vijay Sethupathi for third time without worry about gossips.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X