»   »  'காதலும் கடந்து போகும்' பிப்ரவரி 14-ல் வெளியீடு

'காதலும் கடந்து போகும்' பிப்ரவரி 14-ல் வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சூது கவ்வும்' வெற்றிக்குப் பின் விஜய் சேதுபதி, நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'காதலும் கடந்து போகும்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, 'ப்ரேமம்' படத்தில் நடித்த மடோனா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Vijay Sethupathy's 'Kathalum Kadandhupogum' Feb 14th release

'சூது கவ்வும்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நலன் குமாரசாமி - விஜய் சேதுபதி, சி.வி.குமார் கூட்டணி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர்.

காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு 'காதலும் கடந்து போகும்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதியன்று வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

English summary
Kathalum Kadandhupogum movie with combination of Actor Vijay Sethupathy and Nalan Mumarasami, will be released on February 14th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil